azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 29 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 29 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Karna had physical power, power of intellect, and power of weapons. In fact, he was endowed with all powers. He was much superior to Arjuna in all these respects. Arjuna also did not possess the quality of generosity that Karna had. Karna would never go back on his word. Though he was endowed with all virtues and the spirit of sacrifice, Karna became one of the four wicked Kauravas (Duryodhana, Dussasana, Sakuni, and Karna) because he could not go back on the promise given by him to wicked Duryodhana. Tell me your company, and I shall tell you what you are. Wicked qualities enter you when you associate yourself with wicked people. Similarly, when you are in good company, you imbibe good qualities. Coal shines like fire when it comes in contact with it. As is your company, so you become. As is the flour, so is the chapati. As is the food, so is the belch. (Divine Discourse, Jul 12, 1996)
Particles of dust rise up in the sky in the company of wind but fall down into ditches when they are associated with rainwater. Both their rise and fall happen by the effect of the company. - BABA
கர்ணனுக்கு புஜ பலம், புத்தி பலம், அஸ்திர பலம் ஆகியவை இருந்தன. உண்மையில், அவன் சர்வ வல்லமைகளையும் பெற்றிருந்தான். அவன் அர்ஜுனனை விட எல்லா விதத்திலும் மிக உயர்ந்தவன். ஆனால் அர்ஜுனனுக்கு கர்ணனிடம் இருந்த தயாள குணம் இல்லை. கர்ணன் கொடுத்த வாக்கில் ஒருபோதும் பின்வாங்க மாட்டான். கர்ணன் எல்லா நற்பண்புகளையும் தியாக உணர்வையும் பெற்றிருந்தாலும், தீயவனாகிய துரியோதனனுக்கு தான் கொடுத்த வாக்கைத் திரும்பப் பெற முடியவில்லை; ஆகவே ‘துஷ்ட சதுஷ்டயம்’ என்றழைக்கப்படும் துரியோதனன், துச்சாதனன், சகுனி, கர்ணன் ஆகிய நான்கு தீயவர்களுடன் அவனும் ஒருவனாகிப்போனான். உன்னுடைய சேர்க்கை எதுவென்று சொல், நீ எப்படிப்பட்டவன் என்பதை நான் சொல்வேன். தீயவர்களுடன் நீங்கள் சகவாசம் செய்தால் உங்களுக்கும் தீய குணங்கள் வருகின்றன. அதேபோல நீங்கள் நல்லவர்களுடன் சேர்ந்தால், உங்களுக்கும் நற்குணங்கள் வருகின்றன. நெருப்புடன் சேரும் கரி, அதைப் போலவே பிரகாசிக்கிறது. உன் சேர்க்கை எப்படியோ, நீயும் அப்படியே ஆகிறாய். மாவு எப்படியோ சப்பாத்தியும் அப்படியே. உணவு எப்படியோ, ஏப்பமும் அப்படியே. (தெய்வீக அருளுரை, ஜூலை 12, 1996)
காற்றோடு சேரும் தூசி உயரப் பறக்கிறது, ஆனால் அது மழை நீரோடு சேரும்போது சாக்கடையில் விழுகிறது. அவற்றின் எழுச்சியும் வீழ்ச்சியும் சேர்க்கையின் பலனாகவே ஏற்படுகின்றன. - பாபா