azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 25 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 25 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Even to place one foot forward, man needs an inner urge, a purpose, a prompting. His will is moved by his wish. Therefore, man must endeavour to wish for higher and holier goals. His mind is a bundle of wishes. Turned hither and thither by the dictates of each wish, man wastes the time allotted to him and the skills he is endowed with. He slaves his conscience believing that he is acting right. But, man has to recognise the preciousness of time. Not even a fraction of a second should be wasted. He must be engaged always in the investigation of his own Truth and his own duty to himself. Life is dripping away, drop by drop, from the leaking pot! Time hangs over every head like a sharp sword, ready to inflict the mortal slash. But, man pays no attention to this ever-present calamity! (Divine Discourse, Apr 13, 1981)
Don't waste time; if you waste time you will be wasting your life. - BABA
மனிதன் ஒரு அடி எடுத்து வைப்பதற்குக் கூட ஒரு அகத் தூண்டுதல், ஒரு நோக்கம், ஒரு உந்துதல் தேவைப்படுகிறது. மனிதனின் விருப்பம்தான் இறைவனுடைய சங்கல்பமாக அமைகிறது. எனவே, மனிதன் உயர்ந்த, புனிதமான இலக்குகளை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும். மனம் ஆசைகளின் ஒரு மூட்டையே. ஒவ்வொரு ஆசையின் தூண்டுதல்களால் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படும் மனிதன், அவனுக்கு ஒதுக்கப்பட்ட காலத்தையும், அளிக்கப்பட்ட திறமைகளையும் வீணாக்குகிறான். நாம் சரியாகத்தான் நடக்கிறோம் என எண்ணிக்கொண்டு அவன் தனது மனச்சாட்சியை அடிமைப்படுத்துகிறான். ஆனால் மனிதன் காலத்தின் மதிப்பை உணர வேண்டும். ஒரு வினாடியைக் கூட வீணாக்கக் கூடாது. அவன் எப்போதும் தனது மெய்நிலையையும், தனக்குரிய கடமையையும் ஆராய்வதில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஓட்டைப் பானையில் இருந்து நீர் கசிந்துகொண்டே இருப்பதைப் போல வாழ்க்கையும் கொஞ்சம் கொஞ்சமாக கழிந்துகொண்டே இருக்கிறது! காலமானது ஒவ்வொருவரின் தலையின் மீதும் கூரியவாள் போலத் தொங்கிக்கொண்டு எந்நேரத்திலும் உயிரைப் பறிப்பதற்குத் தயாராக உள்ளது. ஆனால், எப்போதும் உள்ள இந்த ஆபத்தை மனிதன் கவனிப்பதேயில்லை! (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 13, 1981)
காலத்தை வீணாக்காதீர்கள்; நீங்கள் காலத்தை வீணடித்தால் உங்கள் வாழ்க்கையையே வீணடித்ததாகும். - பாபா