azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 23 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 23 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
I like simplicity, I like the dress that will not discourage people from approaching you for a kind word, a bit of service, a helping hand. It must be clean and decent; not outlandish and queer. It should not be worn to attract attention. Just as you desire to wear clean comfortable clothes for the body, desire also clean consoling exercises for the mind, like japam, dhyanam (repetition of holy word and meditation), etc. Use the eyes to watch wholesome things, the feet to proceed to the House of God, the hands to serve the embodiments of God moving around you as men, the tongue to soothe pain, praise virtue, and glorify God. Do not use the eye to vulgarise your brain, the feet to stand in queue for deleterious films. Character is the most precious gift of education. I consider gratitude as the chief component; gratitude above all, to the parents, for this gift of life. (Divine Discourse, Jul 23, 1970)
The educated person and the student undergoing education must both cultivate simplicity; they must discard ostentation. - BABA
நான் எளிமையையே விரும்புகிறேன்; பரிவான வார்த்தைக்காக, சிறிய சேவைக்காக, உதவும் கரத்திற்காக, மக்கள் உங்களை அணுகுவதற்குத் தயங்குமாறு செய்யாத உடையை நீங்கள் அணிவதையே நான் விரும்புகிறேன். அது அருவருப்பாகவும் விசித்திரமாகவும் இல்லாமல், சுத்தமாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும்; பிறருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக அதை அணிந்திருக்கக் கூடாது. எவ்வாறு நீங்கள் உடலுக்கு சுத்தமான சௌகரியமான ஆடைகளை அணிந்துகொள்ள விரும்புகிறீர்களோ, அவ்வாறே மனதிற்கும், ஜபம், தியானம் போன்ற முற்றிலுமாக ஆறுதல் அளிக்கும் பயிற்சிகளை அளிக்க விரும்புங்கள். கண்களை நல்லவற்றைக் காண்பதற்கும், கால்களை ஆலயத்திற்குச் செல்வதற்கும், கைகளை உங்களைச் சுற்றி மனிதர்களாக நடமாடிக் கொண்டிருக்கும் இறைவனின் திருவுருவங்களுக்குச் சேவை ஆற்றுவதற்கும், நாவை பிறர் வேதனையைத் தணிக்கவும், நல்லொழுக்கத்தைப் புகழவும், இறைவனைப் போற்றவும் பயன்படுத்துங்கள். கண்களை உங்களுடைய புத்தியை கீழ்த்தரமாக்குவதற்கோ, கால்களை தீங்கு விளைவிக்கும் திரைப்படங்களைக் காண்பதற்காக வரிசையில் நிற்பதற்கோ பயன்படுத்தாதீர்கள். கல்வியின் விலைமதிப்பற்ற பரிசு நற்குணநலனே. அதன் முக்கியமான அம்சமாக நன்றி உணர்வைக் கருதுகிறேன்; எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வாழ்க்கை எனும் பரிசிற்காக பெற்றோர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். (தெய்வீக அருளுரை,ஜூலை23,1970)
படித்தவர், படித்துக்கொண்டிருக்கும் மாணவர் ஆகிய இருவருமே எளிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்; பகட்டு ஆடம்பரத்தைத் தவிர்க்க வேண்டும். - பாபா