azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 17 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 17 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Pundalika was massaging the feet of his old mother when God appeared before him! He did not interrupt the service, for he was serving the same God, in his mother! Tukaram declared to Pundalika that it was God who had manifested before him; but Pundalika did not waver. He asked God to wait for a while until he had finished the service of the God he had started serving. The prompting inside man to love his mother is an expression of the divine nature in him. If there was no spark of Divinity in man, he would have no love! A person who loves is a theist, whether he goes to a temple or church, or not! Pundalika was not guilty of sacrilege when he asked Lord Panduranga to wait, for he was actually worshipping God in His most accessible form - his mother. You must proceed from the known to the unknown. Then love expands in ever-widening circles, until it covers all nature, until even plucking a leaf from a tree makes you so painful that you dare not injure it! (Divine Discourse, May 24, 1967)
Hate screeches. Fear squeals. Conceit trumpets. But love sings lullabies. - BABA
புண்டலிகன் தன்னுடைய வயதான தாய்க்கு பாதசேவை செய்து கொண்டிருந்தபோது இறைவனான பாண்டுரங்கன் அவன் முன் தோன்றினான். ஆயினும் அவன் தனது சேவையை நிறுத்தவில்லை, ஏனெனில் புண்டலிகன் தன் தாயினுள் இருக்கும் அதே இறைவனுக்குத் தான் சேவை செய்து கொண்டிருந்தான்! துக்காராம் புண்டலிகனிடம், “உனக்கு முன் தோன்றியது இறைவனே!” என்று சொல்லியபோதும் கூட புண்டலிகன் அசைந்து கொடுக்கவில்லை. தன் தாய்க்கு செய்து கொண்டிருந்த அரும்சேவை முடியும்வரை சற்று காத்திருக்குமாறு அவன் பாண்டுரங்கனை வேண்டிக்கொண்டான். தன் தாயை நேசிக்குமாறு மனிதனைத் தூண்டுவது அவனில் உள்ள தெய்வீக இயல்பின் வெளிப்பாடே. மனிதனில் தெய்வீகத்தின் பொறி இல்லையென்றால், அவனிடம் ப்ரேமையே இருக்காது! ஒருவன் கோவிலுக்கோ, தேவாலயத்திற்கோ சென்றாலும் செல்லாவிட்டாலும், நேசிக்கும் இயல்பு கொண்டிருந்தால் அவன் ஆஸ்திகன் தான்! இறைவனாகிய பாண்டுரங்கனைக் காத்திருக்கும்படி வேண்டிக்கொண்ட போது, புண்டலிகன் எந்த தெய்வ நிந்தனைக்கும் ஆளாகவில்லை; ஏனென்றால் அவன் மிகவும் எளிதில் அணுகக்கூடிய இறைவடிவில் இருக்கும் தன் தாயைத்தான் ஆராதித்துக் கொண்டிருந்தான். தெரிந்தவையிலிருந்து தெரியாத ஒன்றை அறிந்துகொள்ள நீங்கள் முற்பட வேண்டும். பிறகு, இயற்கை அனைத்தையும் உள்ளடக்கும் வரை ப்ரேமை எப்போதும் பரந்து விரிவடைகிறது. இது எந்த அளவிற்கு என்றால், மரத்திலிருந்து ஒரு இலையைப் பறிப்பது கூட உங்களை வேதனைக்கு உள்ளாக்கும் என்பதால் நீங்கள் அதைக் காயப்படுத்தத் துணிய மாட்டீர்கள்! (தெய்வீக அருளுரை, மே 24, 1967)
வெறுப்பு கூக்குரலிடும், பயம் அலறும், அகந்தை எக்காளமிடும். ஆனால் ப்ரேமையோ தாலாட்டு பாடும். - பாபா