azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 16 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 16 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Man's nature is fundamentally Truth; his breath is fundamentally Love; his blood is fundamentally Tolerance. Falsehood, hatred and faction are characteristics of beastly or demonic natures. They are acquired from ignorance or greed or from others in society. Today, man is shaped by the head, rather than the heart. It is cleverness that is admired, that pays! But peace and joy emanate from the heart, not the head. The heart teaches compassion, awe, reverence, humility, equanimity, and sympathy - qualities that bind men in love, and turn them towards righteousness and the source and sustenance of the Universe, namely, God. The pursuit of property and possessions cannot uplift the heart into heights of bliss. You are contemporaries of the Avatar who came to guard and guide you; you have the capacity to catch the message and channelise it into action and activity. Make the utmost of this chance! (Divine Discourse, July 1970)
Your very nature is Reality. How can you realise this truth? Only by cultivating pure, selfless and divine love. - BABA
சத்தியமே மனிதனின் அடிப்படை இயல்பு; அடிப்படையில் ப்ரேமையே அவனுடைய சுவாசம்; சகிப்புத்தன்மையே அவனது இரத்தம். அசத்தியம், வெறுப்பு, வேற்றுமையுணர்வு ஆகியவை மிருக அல்லது அசுர இயல்புகள் கொண்டோரின் பண்புகளாகும். அவை அறியாமையாலோ, பேராசையாலோ, சமூகத்தில் உள்ள மற்றவர்களிடம் இருந்தோ பெறப்படுகின்றன. இன்று மனிதன் புத்தியால் உருவாக்கப்பட்டவனாக இருக்கிறானே தவிர இதயத்தால் அல்ல. புத்திசாலித்தனம் தான் போற்றப்படுகிறது, பலனளிக்கிறது! ஆனால் சாந்தி சந்தோஷங்கள் இதயத்திலிருந்து வெளிப்படுகின்றனவே தவிர தலையிலிருந்து அல்ல. மனிதர்களை ப்ரேமையால் பிணைக்கும் குணங்களான இரக்கம், பயபக்தி, பெருமதிப்பு, பணிவு, உள்ளச்சமநிலை, அனுதாபம் ஆகியவற்றை இதயம் போதிக்கிறது; மேலும் அவர்களை தர்மத்தின் பக்கமும், பிரபஞ்சத்தின் ஆதாரமாகவும் காப்பவனாகவும் விளங்கும் இறைவன் பக்கமும் திருப்புகிறது. சொத்துக்களையும், உடமைகளையும் தேடி அலைவது, இதயத்தை ஆனந்தத்தின் உச்சத்திற்கு இட்டுச்செல்லாது. உங்களைக் காத்து வழிகாட்ட வந்த அவதாரத்தின் சமகாலத்தவர்கள் நீங்கள்; அவருடைய அருட்செய்தியைப் புரிந்துகொண்டு, அதைச் செயலிலும், செயற்பாட்டிலும் கடைப்பிடிக்கும் திறன் உங்களிடம் இருக்கிறது. இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! (தெய்வீக அருளுரை,ஜூலை1970)
உங்களுடைய இயல்பே மெய்யுணர்வு தான். இந்த சத்தியத்தை எவ்வாறு உணர்வது? தூய்மையான, தன்னலமற்ற, தெய்வீக ப்ரேமையை வளர்த்துக்கொள்வதால் மட்டுமே! - பாபா