azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 15 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 15 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Now, the law of human behaviour has become "each for himself"! This is because of the fact that “all-are-one-in-God" is not known and realised. This realisation is the product of sadhana; the conviction in it is of slow growth but must be acquired. The great sage, Durvasa, famous in epics for asceticism, is also renowned for his anger when he’s slighted or thwarted by others! He was so sensitive, so egoistic, so uppish, that he forgot the unity of “all-in-God”! He was ready with a frightful curse when anyone showed disregard for his inflated ego! Of what avail are all years of austerity? Surrender all you have and have gained to the Lord. Sometimes, when you have extra cash with you, you hand it over to a trusted friend, saying, "Keep this for me; I’m afraid I may spend it soon if it’s in my hands; I can’t trust myself." God is the friend on whom you should put your trust! So, hand over to Him all that you have and be free and happy! You do not do it now, since faith is wanting! (Divine Discourse, May 24, 1967)
Virtue can grow only in an atmosphere of theism; you must have faith in the omnipresence of God, that God is the witness, the guide, and the guardian. - BABA
இப்போது, மனிதன் நடந்துகொள்ளும் முறை “ஒவ்வொருவரும் தனக்காகவே” என்றாகிவிட்டது! இதற்குக் காரணம், "இறைவனுள் அனைவரும் ஒன்றே" என்ற உண்மையை அறியாமலும் உணராமலும் இருப்பதால் தான். இவ்வாறு உணருவதே ஆன்மிக சாதனையின் பலனாகும்; இந்த திடநம்பிக்கை மெதுவாகத்தான் வளரும், ஆனால் அதைப் பெற்றே ஆக வேண்டும். இதிஹாசங்களில் தவத்திற்குப் பெயர்பெற்ற துர்வாச மகரிஷி, பிறரால் அலட்சியப்படுத்தப்பட்டாலோ, தடுக்கப்பட்டாலோ கோபம் கொள்வதிலும் பெயர் பெற்றவர். “அனைத்தும் இறைவனுள்தான்” என்ற ஒற்றுமையை மறந்துவிட்டதால், அவர் எளிதில் உணர்ச்சி வசப்படுபவராகவும், அகந்தையும், ஆணவமும் கொண்டவராகவும் இருந்தார். யாராவது அவரை மதிக்கவில்லை என்றால், உடனே ஒரு கொடிய சாபம் இடுவதற்கு தயாராக இருந்தார். வருடக்கணக்காகத் தவமிருந்து என்ன பயன்? உங்களிடம் உள்ளதையும், நீங்கள் பெற்றதையும் இறைவனிடம் அர்ப்பணம் செய்து விடுங்கள். சில சமயங்களில், உங்களிடம் பணம் அதிகமாக இருக்கும்போது, ஒரு நம்பகமான நண்பனிடம் சென்று "எனக்காக இந்தப் பணத்தை வைத்துக்கொள்; என் கையில் இருந்தால் விரைவாக செலவு செய்துவிடுவேனோ என்று பயப்படுகிறேன்; என் மீதே எனக்கு நம்பிக்கை இல்லை" என்று சொல்லி ஒப்படைக்கிறீர்கள். நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டிய நண்பன் இறைவன் ஒருவனே! எனவே, உங்களிடம் உள்ள அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள்! இப்போது உங்களிடம் போதுமான நம்பிக்கை இல்லையென்பதால் நீங்கள் அதைச் செய்வதில்லை. (தெய்வீக அருளுரை, மே 24, 1967)
நல்லொழுக்கம் என்பது இறைநம்பிக்கையுள்ள சூழ்நிலையில் தான் வளர முடியும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனே சாட்சியாகவும், வழிகாட்டியாகவும், பாதுகாவலனாகவும் இருக்கிறான் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். - பாபா