azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 10 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 10 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
The true devotee is deeply aware of the transitoriness of earthly triumphs. He knows that death is the final arbiter, God is the only dispenser, and so, he is firm and calm, whether it is foul or fair. He will not slide or climb whatever happens. He knows that the God whom he adores is the Indweller in the blade of grass and in the most distant star. God gives ear to prayers that rise in all languages and even from the silence of the dumb. He has no trace of anger or worry. You too have no reason to develop anger and anxiety. When the teeth bite your tongue do you get angry at them for hurting? Do you break the teeth that hurt it so? No. For, teeth and tongue are both yours, both you. Similarly, he who hurts you and you, are both limbs of the same body, God. Feel that one-ness and avoid hate. (Divine Discourse, Jul 08, 1968)
Just as our body has various limbs such as hands, legs, eyes, ears, nose, and mouth, all forms that you find in this world are different limbs of God. - BABA
உண்மையான பக்தன் உலகியலான சாதனைகளின் நிலையற்ற தன்மையை ஆழமாக அறிந்திருப்பான். மரணமே இறுதியான முடிவு என்பதையும், அனைத்தையும் அருள்பவன் இறைவன் மட்டுமே என்பதையும் அவன் அறிவான்; எனவே, நல்லதோ, கெட்டதோ, அவன் உறுதியாகவும் அமைதியாகவும் இருப்பான். அவன் எது நடந்தாலும் துள்ளிக்குதிக்கவோ, துவண்டுவிடவோ மாட்டான். தான் போற்றும் இறைவனே புல்லிலும், நெடுந்தொலைவிலுள்ள நட்சத்திரத்திலும் உள்ளுறைபவன் என்பதை அவன் அறிவான். இறைவன் எல்லா மொழிகளிலிருந்தும், ஏன் ஊமையின் மௌனத்திலிருந்தும் கூட எழும் பிரார்த்தனைகளுக்கு செவிசாய்ப்பவன். அவனிடம் கோபம் அல்லது கவலையின் சுவடே இல்லை. உங்களுக்கும் கூட கோபமோ பதட்டமோ ஏற்பட எந்தக் காரணமும் இல்லை. பற்கள் உங்கள் நாக்கைக் கடித்தவுடன், அவை உங்களை காயப்படுத்தியதென்று அவற்றின் மீது கோபப்படுகிறீர்களா? அவ்வாறு காயப்படுத்திய பற்களை உடைக்கிறீர்களா? இல்லையே. ஏனெனில், பற்கள், நாக்கு ஆகிய இரண்டுமே உங்களுடையது, இரண்டும் நீங்களே. அதேபோல, நீங்களும் உங்களைக் காயப்படுத்துபவரும், இறைவன் எனும் ஒரே தேகத்தின் அங்கங்களே. அந்த ஒற்றுமையை உணர்ந்து வெறுப்பைத் தவிர்த்து விடுங்கள். (தெய்வீக அருளுரை,ஜூலை08, 1968)
நம் உடலில் கைகள், கால்கள், கண்கள், காதுகள், மூக்கு, வாய் போன்ற பல்வேறு அங்கங்கள் இருப்பது போலவே, இந்த உலகில் நீங்கள் காணும் அனைத்து வடிவங்களும் இறைவனின் வெவ்வேறு அங்கங்களே. - பாபா