azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 07 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 07 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Get rid of your evil qualities, wicked thoughts and bad intentions. Practise nonviolence (ahimsa). What is the meaning of nonviolence? Ahimsa means not to hurt others by thoughts, words, and deeds. Never leave unity of thought, word, and deed, even for a moment. Only when you observe unity of thought, word, and deed in all your endeavours will divine feelings manifest in you. The principle of nonviolence is very subtle. Most people do not understand its correct meaning. Even eating food more than necessary constitutes violence. Why? You hurt yourself by excessive eating. Even unnecessary talking amounts to indulging in violence. Talk only to the extent necessary. That is nonviolence. When you misuse the faculties given by God, all your wealth, power, and position will become meaningless. Since you are caught up in the mire of trivial worldly pursuits, you are unable to realise the infinite Atmic principle. (Divine Discourse, Jul 29, 1996)
If you return harm for harm, how can you be called a good man? Only by returning good for evil can you elevate yourself to a higher state. - BABA
உங்கள் தீய குணங்களையும், எண்ணங்களையும், நோக்கங்களையும் விட்டொழியுங்கள். அஹிம்சையைக் கடைப்பிடியுங்கள். அஹிம்சை என்பதன் பொருள் என்ன? அஹிம்சை என்றால் சிந்தனைகள், சொற்கள், செயல்கள் ஆகியவற்றால் பிறரைக் காயப்படுத்தாமல் இருப்பதே. சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றின் இசைவை ஒருகணம் கூட விட்டுவிடாதீர்கள். சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றின் இசைவைக் கடைப்பிடிக்கும்போது தான் தெய்வீக உணர்வுகள் உங்களில் வெளிப்படும். அஹிம்சை தத்துவம் மிகவும் நுட்பமானது. பெரும்பாலான மக்கள் அதன் சரியான அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. தேவைக்கு அதிகமாக உணவு உண்பது கூட இம்சையாகிறது. ஏன்? அதிகமாக சாப்பிடுவதால் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள். தேவையில்லாமல் பேசுவது கூட இம்சையில் ஈடுபடுவதாகும். தேவையான அளவு மட்டுமே பேசுங்கள். அதுவே அஹிம்சையாகும். இறைவன் கொடுத்த திறன்களை நீங்கள் தவறாகப் பயன்படுத்தினால், உங்கள் செல்வம், அதிகாரம், பதவி அனைத்தும் அர்த்தமற்றதாகிவிடும். நீங்கள் அற்பமான உலகத் தேவைகளின் சேற்றில் சிக்கிக் கொண்டிருப்பதால், எல்லையற்ற ஆத்ம தத்துவத்தை உங்களால் உணர முடியவில்லை. (தெய்வீக அருளுரை,ஜூலை29,1996)
உங்களுக்கு தீங்கிழைத்தவருக்கு பதிலுக்கு நீங்கள் தீங்கிழைத்தால், உங்களை நல்ல மனிதர் என்று எப்படிச் சொல்ல முடியும்? தீமை செய்தவருக்கும் நன்மை செய்வதனாலேயே நீங்கள் உங்களை மேன்மையான நிலைக்கு உயர்த்திக் கொள்ள முடியும். - பாபா