azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 16 Apr 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 16 Apr 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Discipline is essential for the success of every endeavour of man, whatever the field, whether it be economic, social, educational, or merely material and worldly. It is even more essential for success in spiritual effort. The discipline of concentration is indispensable for even common acts like walking, talking, writing or reading. Spiritual progress and bliss depend on disciplined effort. It can come only through hard and difficult toil, not through pleasant easy paths. Life becomes worth living only when one has disciplined habits, concentration of mind, renunciation of sensual pleasures and faith in the Self (Atma). Discipline and concentration are like the embankments which control and direct the flood waters of a river into harmless and fruitful channels. You are engaged in sadhana and the inquiry into the Self and, in this great task, these two will be of great help! (Divine Discourse, Nov 20, 1970)
Be it worship or walking or sitting or eating, everything should be done in a disciplined way. Then your life will become exemplary. - Baba
பொருளாதாரம், சமூகம், கல்வி, அல்லது வெறும் உலகியலான எந்தத் துறையாக இருந்தாலும், மனிதனின் ஒவ்வொரு முயற்சியின் வெற்றிக்கும் ஒழுக்கம் அத்தியாவசியமாகும். மேலும் ஆன்மிக சாதனையில் வெற்றி பெற இது மிக அதிகமாகவே தேவைப்படுகிறது. நடப்பது, பேசுவது, எழுதுவது அல்லது படிப்பது போன்ற பொதுவான செயல்களுக்குக் கூட மனக்குவிப்பின் ஒழுங்கு இன்றியமையாதது. ஆன்மிக முன்னேற்றமும் ஆனந்தமும் ஒழுக்கமான முயற்சியைப் பொறுத்தே இருக்கிறது. இது கடினமான, கஷ்டமான உழைப்பினால் மட்டுமே வருமே தவிர, சுகமான, சுலபமான வழிகளில் அல்ல. ஒழுக்கமான பழக்கவழக்கங்கள், ஒருமுகப்படுத்தப்பட்ட மனம், புலனின்பங்கள் மீது பற்றின்மை, ஆத்ம விசுவாசம் ஆகியவை ஒருவருக்கு இருந்தால் மட்டுமே வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும். ஆற்றின் வெள்ள நீரைக் கட்டுப்படுத்தி, பாதிப்பில்லாமல் பயனுள்ள வகையில் கால்வாய்களின் வழியே பாய்ச்சக் கூடிய கரைகள் போன்று ஒழுக்கமும் மனக்குவிப்பும் விளங்குகின்றன. நீங்கள் ஆன்மிக சாதனை, ஆத்ம விசாரம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளதால், இவை இரண்டும் இந்தப் பெரும் பணியில் பேருதவியாக இருக்கும்! (தெய்வீக அருளுரை, நவம்பர் 20, 1970)
வழிபாடோ, நடைப்பயிற்சியோ, அமர்ந்திருப்பதோ, உண்பதோ எல்லாமே ஒழுங்கான முறையில் செய்யப்பட வேண்டும், அப்போதுதான் உங்கள் வாழ்க்கை ஒரு முன்னுதாரணமாக அமையும். - பாபா