azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 15 Apr 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 15 Apr 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Man should not seek from God, nor desire, nor pray for some petty trifles. More precious and desirable than anything else is God's love. If you wish to ask for anything from God, pray to Him thus - "Oh Lord! Let me have You alone." Once you have secured the Lord, you can get anything you want. That was why Mira sang: "I have obtained the wealth of the gem of Divine Love." When you can have divine love, to crave anything else is like asking for coffee powder from the Kalpataru (Wish-fulfilling Tree)! What you have to seek from God is God Himself and not any small and worthless benefits! Even while praying to God for His grace, you should not indulge in extravagant praise and flattery to win His approbation and seek His favours. Such praise for securing favours has a commercial tinge. Even the favours received through such praise are not proper at all. It is because the rishis and the yogis in the past resorted to such praise that they had to perform penance for hundreds of years to get a vision of the Lord. (Divine Discourse, Oct 09, 1989)
Pray to God for His love. Lead your lives spreading the message of love. - Baba
இறைவனிடமிருந்து மனிதன் எதையும் வேண்டவோ, விரும்பவோ அல்லது அற்பமான விஷயங்களுக்காக பிரார்த்திக்கவோ கூடாது. இறைவனது ப்ரேமையே எல்லாவற்றையும் விட மிக விலைமதிப்பற்றதும், விரும்பத்தக்கதும் ஆகும். நீங்கள் இறைவனிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால், இவ்வாறு பிரார்த்தனை செய்யுங்கள் - “ஓ இறைவா! எனக்கு நீ மட்டுமே வேண்டும்!” நீங்கள் இறைவனைப் பெற்றவுடன், நீங்கள் விரும்புவது எதை வேண்டுமானாலும் பெறலாம். அதனால்தான் பக்த மீரா, "தெய்வப்ரேமை எனும் ரத்தினத்தை நான் பெற்றுவிட்டேன்" எனப் பாடினார். நீங்கள் தெய்வ ப்ரேமையையே பெற முடியும் எனும்போது, வேறு எதையாவது நாடுவதென்பது கற்பகத்தருவின் கீழ் அமர்ந்துகொண்டு காப்பித்தூளை வேண்டுவதற்கு ஒப்பாகும்! நீங்கள் இறைவனிடமிருந்து இறைவனையே கேட்டுப் பெற வேண்டுமே தவிர, சிறியவை, அற்பமானவற்றை அல்ல. அவ்வாறு இறையருளை வேண்டிப் பிரார்த்திக்கும் போது கூட, அவனது அனுக்கிரஹத்தையும் அருளையும் பெறுவதற்காக அதீதமாக வர்ணிப்பதோ, முகஸ்துதி செய்வதோ கூடாது. அவ்வாறு செய்யும் பிரார்த்தனை வியாபாரம் போலாகிவிடுகிறது! அவ்வாறு வர்ணித்து கிடைக்கும் பலன்களும் கூட சரியானவையல்ல. முற்காலத்தில் மஹரிஷிகளும், யோகிகளும் இவ்வாறு வர்ணிக்க முற்பட்டதால்தான், இறைவனின் தரிசனத்தைப் பெறுவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் தவம் செய்ய நேர்ந்தது. (தெய்வீக அருளுரை, அக்டோபர் 09, 1989)
இறைவனுடைய ப்ரேமை வேண்டுமென பிரார்த்தனை செய்யுங்கள். அந்த ப்ரேமையைப் பரப்பி உங்களுடைய வாழ்க்கையை நடத்துங்கள். - பாபா