azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 10 Apr 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 10 Apr 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Be as devoted and disciplined as Arjuna. Be as intelligent and strong as Bhima. Be steadfast and sincere like Dharmaraja. Then, no harm can come to you; you will achieve victory in all your efforts. There are four F's that you must keep before your attention - (1) Follow the Master (2) Face the Devil (3) Fight to the End and (4) Finish at the Goal. ‘Follow the Master’ means, observe Dharma. ‘Face the Devil’ means, overcoming temptations that beset you when you try to earn artha (wealth or wherewithal to live in comfort). ‘Fight to the End’ means, struggle ceaselessly; wage war against the six enemies led by kama (desire). And finally, ‘Finish at the Goal’ means, do not stop until the goal of moksha (Liberation from ignorance and delusion) is reached. The four F's are fundamental for the pursuit of Purusharthas (goals of human life) Dharma, Artha, Kama and Moksha. I shall be ever with you, wherever you are, guarding you and guiding you. March on, fearlessly! (Divine Discourse, Jul 06, 1975)
March on with your eyes on the goal. Do not worry about the past, its mistakes and its failures. - Baba
அர்ஜுனனைப் போல பக்தியும் ஒழுக்கமும் உள்ளவராக இருங்கள். பீமனைப் போல புத்திசாலியாகவும் பலசாலியாகவும் இருங்கள். தர்மராஜரைப் போல உறுதியானவராகவும், நேர்மையானவராகவும் இருங்கள். பின்னர் எந்தத் தீங்கும் உங்களை அண்டாது; உங்களுடைய அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் வெற்றி காண்பீர்கள். நீங்கள் நான்கு ‘F’களை உங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்: (1) Follow the Master (2) Face the Devil (3) Fight to the End, and (4) Finish at the Goal. ‘Follow the Master’ என்றால், ‘தர்ம’த்தைக் கடைப்பிடியுங்கள் என்று பொருள். ‘Face the Devil’ என்றால், வசதியாக வாழ்வதற்காக 'அர்த்தம்' எனப்படும் பொருளை ஈட்டும்போது ஏற்படுகின்ற சபலங்களை வெற்றி கொள்ளுங்கள் எனப் பொருள். ‘Fight to the End’ என்றால், இடையறாது போராடுதல்; அதாவது ‘காம’த்தினால் வழிநடத்தப்படும் ஆறு பகைவர்களுக்கு எதிராகப் போராடுங்கள் என்று பொருள். இறுதியாக ‘Finish at the Goal’ என்றால், அறியாமை மற்றும் மாயையிலிருந்து விடுதலை பெறுதல், அதாவது ‘மோக்ஷம்’ எனும் குறிக்கோளை அடையும்வரை ஓயாதீர்கள் என்று பொருள். நான்கு புருஷார்த்தங்களான தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றைப் பெறுவதற்கான முயற்சிகளுக்கு இந்த நான்கு ‘F’களும் அடிப்படையானவை. நீங்கள் எங்கு இருந்தாலும், நான் உங்களைக் காத்து, வழிநடத்திக் கொண்டு, உங்களுடன் எப்போதும் இருப்பேன். பீடு நடை போட்டுச் செல்லுங்கள், எந்த பயமும் வேண்டாம்! (தெய்வீக அருளுரை, ஜூலை 06, 1975)
குறிக்கோளை அடையும் நோக்குடன் முன்னேறிச் செல்லுங்கள். கடந்த காலம், அப்போது இழைத்த தவறுகள், சந்தித்த தோல்விகள் ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். - பாபா