azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 08 Apr 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 08 Apr 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Devoid of spiritual outlook, all your education and academic degrees are a mere waste. Their value is zero. Hence, fill your lives with devotion to God and develop the outlook “I am not this body. This is a vesture taken upon by me. There is God inside who is conducting my life.” You are like fully ripened fruits. But, the fruits must contain sweet juice. Without that, it cannot be a fruit. You must all have the sweet juice of love. If there is no sweet juice, people will just bite the fruit and throw it away. Hence, fill your hearts with the sweet juice of love. Whatever be the name and form, develop faith in God. God has many names; but God is only one. The ornaments may be many, but gold is one. Do not lose sight of the gold. Without gold, you cannot make ornaments. Develop faith as your foremost quality, irrespective of whether it brings you the desired results or not. Add love to that faith. (Divine Discourse, Dec 26, 2007)
I and you are one. You are not different from Me. - Baba
ஆன்மிகக் கண்ணோட்டம் இல்லாமல் உங்கள் படிப்பு, பட்டங்கள் அனைத்தும் வீணே. அவற்றின் மதிப்பு பூஜ்ஜியம் தான். எனவே, உங்கள் வாழ்க்கையை கடவுள் பக்தியால் நிறைத்து, "நான் இந்த உடல் அல்ல. இது நான் அணிந்திருக்கும் ஒரு உடையே. என்னுள் இருக்கும் இறைவனே என் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்" என்ற கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் முழுமையாகக் கனிந்த பழங்கள் போன்றவர்கள். ஆனால், பழங்களில் இனிய ரசம் இருக்க வேண்டும். அது இல்லாமல், அது பழமாக இருக்க முடியாது. உங்கள் அனைவரிடமும் ப்ரேமையின் இனிய ரசம் இருக்க வேண்டும். இனிய ரசம் இல்லை என்றால் மக்கள் பழத்தைக் கடித்துப் பார்த்துத் துப்பி விடுவார்கள். எனவே உங்கள் இதயங்களை இனிய ப்ரேமரசத்தால் நிறைத்துக் கொள்ளுங்கள். நாம ரூபம் எதுவானாலும், இறைநம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். இறைவனுக்குப் பல திருநாமங்கள் உண்டு; ஆனால் இறைவன் ஒருவனே. ஆபரணங்கள் பலவாக இருக்கலாம், ஆனால் தங்கம் ஒன்றே. அவற்றுள் தங்கம் இருப்பதை மறந்து விடாதீர்கள். தங்கம் இல்லாமல் உங்களால் ஆபரணங்கள் செய்ய முடியாது. உங்களுக்கு விரும்பிய பலனைத் தருகிறதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் இறை நம்பிக்கையை உங்களின் முதன்மையான குணமாக வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த நம்பிக்கையோடு ப்ரேமையைச் சேர்த்துக் கொள்ளுங்கள். (தெய்வீக அருளுரை, 26 டிசம்பர் 2007)
நீங்களும் நானும் ஒன்றே. நீங்கள் என்னிடமிருந்து வேறுபட்டவர் அல்ல. - பாபா