azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 02 Apr 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 02 Apr 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
If value is given to the office that a man holds, which is but temporary, as soon as he retires and starts sitting on a bench in a park, people will stop recognising and saluting him! The schooling that gives just outer polish is a waste of opportunity. Education is not for mere living; it is for life, a fuller life, a more meaningful, and more worthwhile life! There’s no harm if it’s also for gainful employment, but the educated must be aware that existence is not all, that gainful employment is not all! Again, education is not for developing the faculty of argument, criticism, winning a polemic victory over your opponents or exhibiting your mastery over language or logic! That study is best that teaches you to conquer this cycle of birth and death, that gives you mental equipoise that will not be affected by the prospect of death, that will not be disturbed by the blessings or blows of fate. That study begins where this study of yours ends! (Divine Discourse, Sep 12, 1963)
True education is that which is suffused with truth and love. - Baba
ஒரு மனிதர் வகிக்கும் பதவிக்கு மட்டுமே மதிப்பு கொடுக்கப்பட்டால், அது தாற்காலிகமானதே என்பதால், அவர் அதிலிருந்து ஓய்வு பெற்று, பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர ஆரம்பித்தவுடன், மக்கள் அவரைக் கண்டு கொள்வதையும், வணக்கம் செலுத்துவதையும் நிறுத்திவிடுவார்கள்! புறத்தை மட்டும் செம்மைப்படுத்தும் பள்ளிக்கல்வி, கிடைத்த வாய்ப்பை வீணடிப்பது போன்றதாகும். கல்வி என்பது வெறுமனே உயிர் வாழ்வதற்காக மட்டுமல்ல; இது ஒரு முழுமையான, மிகவும் அர்த்தமுள்ள, பயனுள்ள வாழ்க்கைக்கானதாகும்! இது ஆதாயம் தரும் வேலை வாய்ப்பிற்காகவும் இருந்தால் அதனால் எந்தத் தீங்கும் இல்லை; ஆனால் வெறுமனே வாழ்வதுதான் எல்லாம், ஆதாயம் தரும் வேலை வாய்ப்பைப் பெறுவதுதான் எல்லாம் என்று கருதக்கூடாது என்பதைப் படித்தவர்கள் உணர வேண்டும்! மேலும் கல்வி என்பது வாதத்திறனை வளர்த்துக் கொள்வது, விமர்சிப்பது, உங்கள் எதிரிகளை வாதத்திறமையால் வெற்றிகொள்வது, மொழி அல்லது தர்க்கத்தில் உங்கள் தேர்ச்சியைக் காட்டிக்கொள்வது ஆகியவற்றிக்காகவும் அல்ல! பிறப்பு, இறப்பு எனும் சுழற்சியிலிருந்து மீள்வது எப்படி என்பதைக் கற்றுக்கொடுத்து, மரண பயத்தாலோ, விதியின் ஏற்றத்தாழ்வுகளாலோ பாதிக்கப்படாத சமச்சீரான மனநிலையை உங்களுக்குத் தருகின்ற கல்வியே சாலச் சிறந்ததாகும். உங்களுடைய இப்போதைய கல்வி முடியும்போது அந்தக் கல்வி தொடங்குகிறது! (தெய்வீக அருளுரை, செப்டம்பர் 12, 1963)
சத்தியத்திலும் ப்ரேமையிலும் தோய்ந்த கல்வியே உண்மையான கல்வியாகும். - பாபா