azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 28 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 28 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Ravana taught a great lesson to the world. He exclaimed: "Oh men! Do not live as I have lived and ruin your lives." What is the root cause of Ravana's ruin? Unable to conquer his desires and unwilling to get rid of his impulses, he ruined his entire clan. His sons were killed. His brother and other kinsmen died and ultimately his country itself was reduced to ashes. Ravana confessed - "In the end I ruined myself”. This was the message Ravana gave to his countrymen in his last moments. Only by suppressing desires does a man manifest his humanness. A man who is unable to put an end to his desires puts an end to himself. A good man by his good conduct achieves greatness. Ravana sought to achieve greatness but did not strive to lead a good life. Rama's career is different. He aspired only to be a good man and did not seek greatness. (Divine Discourse, Apr 16, 1997)
By conquering the world one may become the supreme sovereign over them. But one who has mastered his senses is supreme over all rulers. - Baba
இராவணன் உலகிற்கு ஓர் மிகச் சிறந்த பாடத்தைக் கற்பிக்கிறான். அவன், "ஓ மனிதர்களே! நான் வாழ்ந்தது போல் வாழ்ந்து உங்கள் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்ளாதீர்கள்" என உரக்கக் கூறுகிறான். இராவணனுடைய அழிவிற்கு மூலகாரணம் என்ன? தனது ஆசைகளை வெல்ல முடியாததாலும் தன்னுடைய இச்சைகளை விட்டுவிட விரும்பாததாலும், அவன் தன் குலமனைத்தையும் அழித்து விட்டான். அவனுடைய மகன்கள் கொல்லப்பட்டனர். அவனது சகோதரரும் மற்ற உறவினர்களும் இறந்து, இறுதியில் அவனது நாடே சாம்பலாகி விட்டது. “முடிவில் நானே என்னை அழித்துக் கொண்டேன்” என இராவணன் ஒப்புக் கொள்கிறான். இதுவே இராவணன் தன் நாட்டு மக்களுக்குத் தனது இறுதித் தருணங்களில் கூறிய செய்தியாகும். ஆசைகளை அடக்கிக் கொண்டால் மட்டுமே மனிதன் தன் மனிதத்தன்மையை வெளிப்படுத்த முடியும். ஆசைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலாத மனிதன் தன்னுடைய வாழ்க்கைக்கே முடிவை ஏற்படுத்திக் கொள்கிறான். ஒரு நல்ல மனிதன் தன் நன்னடத்தையால் உயர்ந்தவனாகிறான். இராவணன் பெரியவனாக வேண்டும் என முயற்சித்தானே தவிர நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு முயற்சிக்கவில்லை. இராமனின் வாழ்க்கையோ இதற்கு நேர்மாறானது. அவர் ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்று மட்டுமே ஆசைப்பட்டார், பெரியவனாக வேண்டும் என விரும்பவில்லை. (தெய்வீக அருளுரை, ஏப்ரல்16, 1997)
உலகத்தையெல்லாம் வெல்வதனால் ஒருவன் பேரரசன் ஆகலாம்; ஆனால் தன் புலன்களை வென்றவன் மட்டுமே பேரரசர்களுக்கெல்லாம் பேரரசனாவான். - பாபா