azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 27 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 27 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

You may not get a chance to partake in some gigantic scheme of service through which millions may be benefitted; you can lift a lame lamb over a stile, or lead a blind child across a busy road. That too is an act of worship. Seva is more fruitful than japa, dhyana, yajna and yaga, usually recommended for spiritual aspirants. For, Seva serves two purposes: the extinction of the ego, and the attainment of ananda (bliss). When someone sitting near you is sunk in sorrow; can you be happy? No. A baby nearby might be weeping pathetically, and your eyes are full of tears in sympathy. Why? There is an unseen bond between the two. Man alone has this quality of sympathy; he alone can be happy when others are happy, and miserable when others are miserable. That is why he is the paragon of creation, the acme of animal advancement. Man alone is capable of seva; that is his special glory and unique skill. (Divine Discourse, Mar 04, 1970)
Serving anyone is serving Me, for, I am in all. - Baba
லட்சக்கணக்கானவர்கள் பயனடையக் கூடிய சில மாபெரும் சேவைத் திட்டத்தில் பங்குகொள்ள உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போகலாம்; ஆனால் நீங்கள் ஒரு முடமான ஆட்டுக்குட்டியை சுவற்றைத் தாண்டிச் செல்வதற்கு தூக்கி விடலாம் அல்லது ஒரு பார்வையற்ற குழந்தை பரபரப்பான சாலையைக் கடக்க உதவலாம்; அதுவும் கூட இறை வழிபாடுதான். பொதுவாக ஆன்மிக சாதகர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜபம், தியானம், யக்ஞம், யாகம் ஆகியவற்றை விட சேவையே அதிகம் பயனுள்ளதாகும். ஏனெனில், சேவை இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுகிறது: 1. அகந்தையை அழிப்பது, 2. ஆனந்தத்தை அளிப்பது. உங்களுக்கு அருகில் அமர்ந்திருப்பவர் சோகத்தில் மூழ்கி இருக்கும்போது நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருக்க முடியுமா? இல்லையே! ஒரு குழந்தை மிகவும் பரிதாபமாக அழுதுகொண்டிருந்தால், பரிவின் காரணமாக உங்கள் கண்கள் கண்ணீர்க் குளமாகி விடுகின்றன. ஏன்? இருவருக்கும் இடையில் கண்ணுக்குப் புலப்படாத ஓர் பிணைப்பு இருக்கிறது. மனிதனுக்கு மட்டுமே இந்தப் பரிவிரக்கம் இருக்கிறது; அவன் மட்டுமே பிறர் சந்தோஷமாக இருக்கும்போது சந்தோஷப்படவும், பிறர் துக்கமாக இருக்கும்போது துக்கப்படவும் முடியும். அதனால்தான், அவன் படைப்பில் நிகரற்றவனும், விலங்கின பரிணாம வளர்ச்சியின் சிகரமும் ஆவான். மனிதன் மட்டுமே சேவையாற்ற வல்லவன்; அதுவே அவனுடைய சிறப்பும் தனித்திறனும் ஆகும். (தெய்வீக அருளுரை, மார்ச் 04, 1970)
எவருக்கு சேவை ஆற்றினாலும் எனக்கே சேவையாற்றுகிறீர்கள்; ஏனெனில் நானே அனைவருள்ளும் இருக்கிறேன். - பாபா