azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 24 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 24 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Take it that it is Rama that speaks through you and honour every word as Rama would have done. Consider how much Lakshmana had to repent for not acting, on one fateful occasion, according to the word he had given to Rama Himself. Rama had asked him to never leave Sita alone in the hermitage and he had agreed. But he left the place and that is how Ravana could kidnap Sita and carry her to his island city! Rama is Atma-Rama, the voice of God within. Do not disobey it or circumvent its directives. Pray that the voice alerts you ever, pray with humility and surrender to the advice. Then Rama will guide you right with compassion. Ramadas of Bhadhrachalam was thrown into prison; he was whipped without mercy. But he never lost faith in Rama. He pleaded plaintively for grace, and he was able to earn divine intervention to save himself from torture. Unwavering faith is the sign of spiritual success. That is the result of the awareness of one's inner Reality, the stabilising core, the Divine in man. (Divine Discourse, Apr 21, 1983)
He who obeys the dictates of the Lord is indeed at ease, he is a yogi; he who disobeys the dictates of the Lord is the diseased (the rogi). - Baba
உங்கள் மூலமாகப் பேசுவது இராமனே என்பதையும், இராமன் எப்படிச் செய்திருப்பாரோ அதேபோல நீங்களும் ஒவ்வொரு சொல்லையும் காப்பாற்ற வேண்டும் என்பதையும் உணருங்கள். துரதிருஷ்டவசமான சூழ்நிலையில், இராமனுக்கு தான் கொடுத்த வாக்கின்படி செயல்பட முடியாமல் போனோமே என்று இலக்குமணன் எவ்வளவு வருத்தப்பட்டான் என்பதையும் எண்ணிப் பாருங்கள். பர்ணசாலையில் சீதையைத் தனியாக விட்டுவிட்டு போகவேண்டாம் என இராமன் சொன்னதை இலக்குமணன் ஏற்றுக் கொண்டான். ஆனால், அந்த இடத்தை விட்டு அகன்றதால், இராவணன் சீதையை அபகரித்து இலங்கைக்குக் கொண்டு செல்ல முடிந்தது! இராமனே அகத்திலுள்ள தெய்வத்தின் குரலான ஆத்மாராமனாக விளங்குகிறான். அதன் கட்டளைகளை மீறவோ தவிர்க்கவோ வேண்டாம். அந்தக் குரல் உங்களை எப்போதும் எச்சரித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று பணிவுடன் பிரார்த்தித்து, அதன் அறிவுரைக்குக் கீழ்ப்படியுங்கள். பிறகு உங்களை இராமன் கருணையுடன் நல்வழிப்படுத்துவான். பத்ராசல ராமதாஸ் சிறையில் அடைக்கப்பட்டு ஈவிரக்கமின்றி அடித்துத் துன்புறுத்தப்பட்டார். ஆயினும் அவர் இராமன் மீது கொண்டிருந்த நம்பிக்கையை ஒருபோதும் இழக்கவில்லை. தன் மீது கருணை புரியுமாறு வேதனையுடன் முறையிட்ட அவரால் இறைவனையே தலையிடச் செய்து அக்கொடுமையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள முடிந்தது. நிலைகுலையாத நம்பிக்கையே ஆன்மிக வெற்றியின் அடையாளமாகும். அதுவே, நிலையான உட்கருவாக மனிதனுள் உறையும் இறைவன்தான் தனது மெய்நிலை என்பதை ஒருவர் உணர்ந்ததற்கான பலனாகும். (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 21, 1983)
எவனொருவன் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறானோ அவனே உண்மையில் சுசுவாசி, யோகி; கீழ்ப்படியாதவன் ரோகி! - பாபா