azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 22 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 22 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Love all. Have faith that God is present in all. Make everybody happy. Only then can you attain happiness. It is impossible for you to attain happiness without making others happy. On this day of Ugadi, take a firm resolve to purify your heart. Past is past. It cannot be retrieved. When you are walking on the road, you should look at the path ahead of you. What is the point in looking behind? Likewise, there is no point in brooding over the past. The future is not certain. What is the guarantee that you will be alive until tomorrow? So, do not worry about your future. Live in the present. It is not an ordinary present. It is omnipresent, meaning the results of the past and seeds of the future are contained in it. So, when you make proper use of the present, you can rest assured that your future is safe and secure. (Divine Discourse, Apr 13, 2002)
Spiritual pursuit is the right way of making use of time. - Baba
அனைவரையும் நேசியுங்கள். இறைவன் எல்லாவற்றிலும் இருக்கிறான் என்று நம்புங்கள். அனைவரையும் சந்தோஷப்படுத்துங்கள். அதன் பின்னரே நீங்கள் சந்தோஷமாக இருக்க முடியும். மற்றவர்களை சந்தோஷப்படுத்தாமல் நீங்கள் சந்தோஷமாக இருப்பது சாத்தியமில்லை. இன்றைய யுகாதித் திருநாளில், உங்களுடைய இதயத்தை பரிசுத்தமாக்கிக் கொள்ள உறுதி பூணுங்கள். கடந்தகாலம் கடந்து விட்டது. அதை மீட்டெடுக்க முடியாது. நீங்கள் சாலையில் நடந்து செல்லும்போது, உங்களுக்கு முன்னால் உள்ள பாதையைத் தான் பார்க்க வேண்டும். பின்னால் திரும்பி பார்ப்பதில் என்ன பயன்? அதேபோல, கடந்தகாலத்தைப் பற்றி யோசிப்பதில் அர்த்தமில்லை. எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்பது நிச்சயமில்லை. நாளை வரை நீங்கள் உயிருடன் இருப்பீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? எனவே, உங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நிகழ்காலத்தில் (Present-ல்) வாழுங்கள். இது ஒரு சாதாரண நிகழ்காலம் (Present) அல்ல. இது கடந்தகாலத்தின் விளைவுகளையும், எதிர்காலத்திற்கான விதைகளையும் தன்னகத்தே கொண்ட அனைத்துமான காலமாகும் (Omnipresent). எனவே, நீங்கள் நிகழ்காலத்தை (Present-ஐ) சரியாகப் பயன்படுத்தினால், உங்களுடைய எதிர்காலம் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 13, 2002)
ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்வதுதான் காலத்தை சரியாக பயன்படுத்துவதற்கான வழியாகும். - பாபா