azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 21 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 21 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
First of all, fill your heart with love for God. Your heart is like a tank, and the senses are like taps. When you fill the tank of your heart with love, the sweet water of love will flow through the taps of senses. As are the feelings in your heart, so are the actions. When your heart is full of love, all your actions will be suffused with love. If you throw a stone into a well, it will create ripples in the entire well. Likewise, when you throw a stone of a good or bad thought in the lake of your mind, its effect will spread to all the limbs of your body. When a bad thought enters your mind, your eyes will see evil, your hands will do evil, your speech will become evil, your ears will hear evil, and your feet will walk to only evil places. The effect of thoughts will spread in the entire body right from top to toe. Heart is most important. When the heart is not pure, life becomes meaningless. (Divine Discourse, Jul 23, 1996)
The spring of Divinity that emerges from your heart is superior to even ambrosia. Such is the sweetness, greatness, and power of your heart. - Baba
முதலில், உங்கள் இதயத்தை இறைவன்பால் கொண்ட ப்ரேமையால் நிரப்புங்கள். உங்கள் இதயம் ஒரு தொட்டி போன்றது, புலன்கள் குழாய்கள் போன்றவை. உங்கள் இதயத் தொட்டியை ப்ரேமையால் நிரப்பும்போது, புலன்கள் எனும் குழாய்களின் வாயிலாக இனிமையான ப்ரேமையின் நீர் வெளிப்படும். உங்கள் இதயத்தின் உணர்வுகள் எப்படியோ செயல்களும் அப்படியே. உங்கள் இதயம் ப்ரேமையால் நிறைந்திருந்தால், உங்கள் செயல்கள் அனைத்தும் ப்ரேமையில் தோய்ந்திருக்கும். நீங்கள் கிணற்றில் ஒரு கல்லை எறிந்தால், அது கிணறு முழுவதும் அலைகளை உருவாக்கும். அதே போல, நல்ல அல்லது கெட்ட எண்ணமெனும் கல்லை உங்கள் மனமாகிய ஏரியில் எறிந்தால் அதன் விளைவு உங்கள் உடலின் எல்லா அங்கங்களுக்கும் பரவும். உங்கள் மனதில் ஒரு கெட்ட எண்ணம் நுழைந்து விட்டால், உங்கள் கண்கள் கெட்டதையே பார்க்கும், உங்கள் கைகள் கெட்ட செயல்களையே செய்யும், உங்கள் பேச்சு கெட்டதாக மாறும், உங்கள் காதுகள் கெட்டதையே கேட்கும், உங்கள் கால்கள் கெட்ட இடங்களுக்கு மட்டுமே நடந்து செல்லும். எண்ணங்களின் தாக்கம் உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் முழுவதும் பரவும். இதயம் மிக முக்கியமானது. இதயம் தூய்மையாக இல்லாதபோது வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும். (தெய்வீக அருளுரை, ஜூலை 23, 1996)
உங்கள் இதயத்தில் இருந்து வெளிப்படும் தெய்வீக ஊற்று அமுதத்தை விட மேலானதாகும். உங்கள் இதயத்தின் இனிமை, மகத்துவம், சக்தி அத்தகையது. - பாபா