azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 18 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 18 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Jnana (spiritual knowledge) is regarded as the primary requisite for man. But what is really primary is his conduct - righteous conduct. One's conduct determines one's qualities and the qualities, in their turn, determine one's behaviour. All are God's children and are equally entitled to the love of the Lord. Why then are there differences among men? Why is there no equality or sameness? This is because of differences in the mental makeup of people. If the mind is impure, one's actions are bound to be impure. When the mind and the consciousness are warped by egoism, human behaviour is also distorted. When these are turned towards the Divine, good actions follow naturally. The mind is the cause of good and bad deeds. Hence, whatever we wish to achieve, we should try to accomplish without excitement or agitation. (Divine Discourse, Apr 08, 1983)
Love is another name for Dharma. True love is priceless. - Baba
ஆன்மிக ஞானமே மனிதனின் முதன்மைத் தேவையாகக் கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் முதன்மையானது அவனுடைய தார்மிக நடத்தையே. ஒருவரின் நல்லொழுக்கம் அவரது குணங்களை தீர்மானிக்கிறது; குணங்கள் ஒருவருடைய நன்னடத்தையைத் தீர்மானிக்கின்றன. அனைவரும் இறைவனின் குழந்தைகளே; இறைவனின் அன்புக்கு அனைவரும் சமமான தகுதியுடையவர்களே. பிறகு ஏன் மனிதர்களுக்கு இடையே இத்தனை வேறுபாடுகள் உள்ளன? ஏன் சமத்துவமோ ஒருமையோ இல்லை? இதற்குக் காரணம் மனிதர்களின் மனப்பாங்கில் உள்ள வேறுபாடுகளே. மனம் தூய்மையற்றதாக இருந்தால் ஒருவரின் செயல்களும் தூய்மையற்றதாக இருக்கும். மனமும் உணர்வும் அகந்தையால் பீடிக்கப்படும்போது, மனித நடத்தையும் விகாரமாகி விடுகிறது. இவற்றை இறைவன்பால் திருப்பினால் நல்ல செயல்கள் இயல்பாக நடக்கும். நல்ல கெட்ட செயல்களுக்கு மனமே காரணம். எனவே, நாம் எதைச் சாதிக்க விரும்புகிறோமோ, அதை பரபரப்போ பதட்டமோ இன்றி சாதிக்க முயன்றிட வேண்டும். (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 08, 1983)
ப்ரேமையே தர்மத்தின் மற்றொரு பெயர். உண்மையான ப்ரேமை விலைமதிப்பற்றது. - பாபா