azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 17 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 17 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
If we think that the effect of prarabdha karma (the destined consequences of past actions) is inescapable, then what is the use of worshipping God? Even though prarabdha is there, the grace of God will certainly remove, to a large extent, the bad effects from it. Here is a small example. There is an injection bottle. It is written on it that the medicine inside can be used up to 1970. In 1972, that very bottle is there, and so is the medicine in it. But the medicine will have no potency. It cannot serve its purpose. In the same way, in our destiny there may be the medicine or prarabdha; but by the grace of God, we can weaken and blunt its effect. Even though it is there, it cannot trouble us. We can become beneficiaries of God’s grace; we need not be afraid of either prarabdha or sanchita or agami (the different types of karmas). If God is pleased with our worship, He will certainly annul the bad effects of these. Therefore, the most important thing we have to try is to earn the grace of God, through which we can overcome all these bad effects. (Summer Showers 1972, Ch 11)
Mountains of sin will vanish like mist by God's grace. - Baba
பிராரப்த கர்மா’ எனும் முன்வினைப் பயன்களிலிருந்து தப்ப முடியாது என்று நாம் நினைத்தால், இறைவனை வழிபடுவதால் என்ன பயன்? பிராரப்தம் என்பது இருந்தாலும், அதனால் ஏற்படும் தீய விளைவுகளை இறைவனின் அருள் நிச்சயமாக பெருமளவிற்கு நீக்கிவிடும். ஒரு சின்ன உதாரணம். ஒரு ஊசி மருந்து பாட்டில் இருக்கிறது. அதனுள்ளே இருக்கும் மருந்து 1970 வரை உபயோகிக்கலாம் என்று அதன் மீது எழுதப்பட்டிருக்கிறது.1972-ல் அந்த பாட்டிலும் இருக்கும், அதில் உள்ள மருந்தும் இருக்கும், ஆனால் அந்த மருந்துக்கு வீரியம் இருக்காது. அதனால் எந்தப் பயனும் இல்லை. அதைப்போலவே, நம் தலைவிதியில் பிராரப்தம் எனும் மருந்து இருக்கலாம்; ஆனால் இறைவனின் அருளால் நாம் அதன் பாதிப்பை பலவீனப்படுத்தித் தடுக்க முடியும். அது அங்கிருந்தாலும் நம்மை பாதிக்காது. நாம் இறையருளுக்குப் பாத்திரமாகிவிட்டால், பிராரப்தம், சஞ்சிதம், ஆகாமியம் ஆகிய கர்மாக்களின் பலன்களைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. நம் வழிபாட்டால் இறைவன் மகிழ்ச்சியடைந்து விட்டால், இவை அனைத்தின் தீய பாதிப்புகளையும் துடைத்தெறிந்திடுவார். எனவே நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் இறைவனின் அருளைப் பெறுவதுதான்; அதன் மூலம் நாம் இந்த மோசமான பாதிப்புகளையெல்லாம் வென்று விட முடியும். (கோடையருள் மழை 1972, அத்தியாயம்-11)
மலையளவு பாவமெல்லாம் இறையருளால் பனிபோல் மறைந்துவிடும். - பாபா