azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 11 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 11 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Only a young person with good qualities can become a good leader. One must take part in social service as a preparation for leadership. Everyone should realise that their happiness is bound to the happiness of society as a whole. Parents and teachers should develop such attitudes in the students. Despite all the achievements in the physical world, how far has man been able to develop his human qualities? This is the question facing the world today. If people study the ancient history of Bharat, they will realise the importance that the ancients attached to Truth. There may be differences at the individual level, but when national interests are involved, these differences should be forgotten and all should act in unity. This was the attitude of Dharmaja in respect of his Kaurava cousins. He said, “At the individual level, we five Pandava brothers might be ranged against the hundred Kauravas. But if the nation is in peril, we are 105 against the rest. It is our duty to protect the nation.” (Divine Discourse, Nov 22, 1993)
Together with your studies, cultivate humility and reverence, and learn to conduct yourselves in an exemplary manner. - Baba
நற்பண்புகளை உடையவன் மட்டுமே நல்ல தலைவனாக முடியும். தலைவனாக ஆவதற்கு ஒருவர் சமூக சேவையில் பங்கேற்க வேண்டும். தங்களின் மகிழ்ச்சி ஒட்டுமொத்த சமுதாயத்தின் மகிழ்ச்சியைச் சார்ந்துள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும். மாணவர்களிடம் இது போன்ற விசால மனப்பான்மையை பெற்றோர்களும் ஆசிரியர்களும் வளர்க்க வேண்டும். உலகில் சாதித்தவை எத்தனையோ இருந்தும், மனிதன் தன் மனித குணங்களை எந்த அளவிற்கு வளர்த்துக் கொண்டிருக்கிறான்? இதுதான் இன்று உலகம் எதிர்நோக்கியுள்ள கேள்வியாகும். பாரதத்தின் தொன்மையான வரலாற்றை மக்கள் படித்தால், நமது முன்னோர்கள் சத்தியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை அவர்கள் உணர்வார்கள். தனிப்பட்ட முறையில் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் தேசத்தின் நலன் என்று வரும்போது இந்த வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இதுவே தர்மராஜர் தனது கௌரவ சகோதரர்களிடம் கொண்டிருந்த மனப்பாங்காகும். அவர், "தனிப்பட்ட முறையில், ஐந்து பாண்டவ சகோதரர்களாகிய நாங்கள் நூறு கௌரவர்களுக்கு எதிராக இருக்கலாம். ஆனால் தேசத்திற்கு ஆபத்து என்றால், நாங்கள் 105 பேராக ஒன்றிணைந்து எதிர்த்து நிற்போம். தேசத்தைப் பாதுகாப்பது நமது கடமை” என்றார். (தெய்வீக அருளுரை, நவம்பர் 22, 1993)
உங்கள் படிப்புடன் சேர்த்து பணிவையும் பயபக்தியையும் வளர்த்துக் கொள்ளுங்கள்; மேலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்வதற்கும் கற்றுக்கொள்ளுங்கள். - பாபா