azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 09 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 09 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
If man yields to the mind and its vagaries, and the mind is enslaved by the senses and their fancies, man cannot escape calamity. The mind prompts man to seek happiness, and avoid misery; it creates the distinction and deludes the activity; it pushes forward and pulls back, tossing man back and forth, throughout his life. The idea of happiness, which is often only another form of comfort, arises in the mind and gets concretised as objects shaped by the hands and brains of man like the aeroplane, the radio, and even the bomb that devastates and delights the mind saturated with hate. Ideas, desires, cravings, yearnings - these get actualised and so, the world is only the product of the mind. In fact, the Universe is itself the manifestation of the Divine Mind, which willed, Ekoham bahusyam: "I am one, let Me become many!" The Universe arose in the mind of God, it sprouted and spread there, and since then, the mind has become potent and permeating. For each of you, it is the mind that colours the world. If it is pure, the world is congenial; if it is unclean, the world is replete with jeopardy. (Divine Discourse, Jul 23, 1971)
The mind, it has been said, is the cause of one's bondage or liberation. Bad thoughts beget bondage. Good thoughts lead to liberation. - Baba
மனதிற்கும் அதன் போக்குகளுக்கும் மனிதன் அடிபணிந்து, மனமானது புலன்களுக்கும் அவற்றின் விருப்பங்களுக்கும் அடிமையாகிவிட்டால், மனிதன் பேரழிவிலிருந்து தப்ப முடியாது. மனம் துன்பத்தைத் தவிர்த்து இன்பத்தை நாடுமாறு மனிதனைத் தூண்டுகிறது; இது இருமையை உருவாக்கி, செயலை மேற்கொள்ள விடாமல் தடுக்கிறது; மேலும் இது வாழ்நாள் முழுவதும் மனிதனை முன்னும் பின்னும் தள்ளி, மேலும் கீழும் பந்தாடுகிறது. பெரும்பாலும் மகிழ்ச்சி என்பது சௌகரியத்தின் மற்றொரு வடிவமே. அது மனதில் தோன்றி, மனிதனின் கரங்களாலும், அறிவாலும் தயாரான பல பொருட்களாக, அதாவது விமானம், வானொலி, ஏன் அழிவை ஏற்படுத்தி வெறுப்பால் நிறைந்த மனதை களிப்படையச் செய்யும் குண்டு போன்றவையாகவும் கூட உருப்பெறுகின்றன. எண்ணங்கள், ஆசைகள், விருப்பங்கள், ஏக்கங்கள் ஆகியவை நனவாக்கப்படுகின்றன என்பதால் உலகமே மனதால் உருவான பொருள் தான். உண்மையில், "நான் ஒருவனே, நானே பலவாக ஆகிறேன்" அதாவது 'ஏகோஹம் பஹுஸ்யாம்' என்று சங்கல்பித்த பரப்ரம்மத்தின் வெளிப்பாடே இந்தப் பிரபஞ்சம் ஆகும். பிரபஞ்சம் இறைவனின் மனதில் தோன்றியது, அது அங்கு துளிர்விட்டுப் பரவியது; அன்றிலிருந்து, மனம் ஆற்றல்மிக்கதாகவும் வியாபிக்கக்கூடியதாகவும் ஆகிவிட்டது. உங்கள் ஒவ்வொருவருக்கும், மனம் தான் உலகத்தின் இயல்பை முடிவு செய்கிறது. மனம் சுத்தமாக இருந்தால் உலகம் இசைவானதாக இருக்கிறது; அசுத்தமாக இருந்தால் உலகம் ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது. (தெய்வீக அருளுரை, ஜூலை 23, 1971)
மனமே ஒருவரின் பந்தத்திற்கோ அல்லது மோட்சத்திற்கோ காரணம் எனப்படுகிறது. கெட்ட எண்ணங்கள் பந்தத்தை ஏற்படுத்துகின்றன. நல்ல எண்ணங்கள் மோட்சத்திற்கு வழிவகுக்கின்றன. - பாபா