azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 08 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 08 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
You might have heard some people say that I became Sai Baba when a scorpion stung Me! Well, I challenge any one of you to get stung by scorpions and transform yourself into Sai Baba. No, the scorpion had nothing to do with it! In fact, there was no scorpion at all! I came in response to the prayers of sages, saints, and spiritual aspirants for the restoration of dharma (righteousness). When there is a sign of a little unrest, the police constable appears on the scene; if the mob gets unruly, the inspector rushes in; and if it becomes violent, the Superintendent of Police has to be personally present on the scene to quell it. If, however, the situation waxes hot, the Inspector General has to make himself available, is it not? This is a situation in which the Inspector General is taking over all charge of the situation. The sages, savants, saints, yogis, and divine personalities have had their try, and they will all be cooperating in the task of re-establishing righteousness and clearing the path for the world attaining absolute peace (shanti). (Divine Discourse, Feb 23, 1958)
You should realise that I have come to remind you of your Reality that in fact, every one of you is an embodiment of Sat-chit-ananda. - Baba
சிலர் ஒரு தேள் என்னைக் கொட்டியதால் தான் நான் சாயிபாபாவாக ஆனேன் எனக் கூறுவதை நீங்கள் கேட்டிருக்கக் கூடும்! நல்லது, உங்களில் யாராவது ஒருவர் தேளால் கொட்டப்பட்டு, சாயிபாபாவாக ஆகிக் காட்டுங்கள் என நான் உங்களுக்குச் சவால் விடுகிறேன். இல்லை, தேளுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை! உண்மையில், தேள் என்பதே இல்லை! தர்மம் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று ரிஷிகள், முனிவர்கள், ஆன்மிக சாதகர்கள் ஆகியோர் செய்த பிரார்த்தனைகளை ஏற்று நான் வந்துள்ளேன். ஏதாவது ஒரு இடத்தில் சிறு குழப்பம் தோன்றுவதற்கான அறிகுறி தென்பட்டவுடன், ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் அந்த இடத்திற்கு வருகிறார்; அங்குள்ள கூட்டம் கட்டுக்கடங்காமல் போனால் இன்ஸ்பெக்டர் விரைகிறார்; அதுவே வன்முறையாக மாறிவிட்டால், அதை அடக்க போலீஸ் சூப்பரின்டென்டன்ட்டே அந்த இடத்திற்கு நேரில் வந்தாக வேண்டும். ஒருவேளை அந்தச் சூழல் மிகத் தீவிரமாக ஆகிவிட்டால், இன்ஸ்பெக்டர் ஜெனரலே அங்கு வந்தாக வேண்டியுள்ளது, அல்லவா? இப்படிப்பட்ட நிலைமையில் தான் இன்ஸ்பெக்டர் ஜெனரலே சூழ்நிலையின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்கின்றார். ரிஷிகள், ஆன்றோர்கள், முனிவர்கள், யோகிகள் மற்றும் அவதார புருஷர்கள் அனைவரும் தங்களது முயற்சியை மேற்கொண்டனர்; மேலும், தர்மத்தை மீண்டும் நிலைநாட்டி, உலகம் பிரசாந்தியைப் பெறுவதற்கான பாதையைச் செப்பனிடும் பணியில் அவர்கள் அனைவரும் ஒத்துழைக்க உள்ளனர். (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 23, 1958)
நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய உண்மை நிலையான சச்சிதானந்த ஸ்வரூபமே என்பதை உங்களுக்கு நினைவுறுத்தவே நான் அவதரித்துள்ளேன் என்பதை நீங்கள் உணர வேண்டும். - பாபா