azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 06 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 06 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Even if man does not attempt to seek God, he can at least seek shanti, santosha, soukhyam and swatantra - peace, joy, happiness and independence. He does not now seek even these. Nor does he try to learn how to get them. The top spins perpetually and has no rest; man too pines and labours forever and has no relief from the round. The only peace and joy that he gets now are of a momentary kind; here now, gone the next minute. Pain puts a stop to joy; joy is but the absence of pain. Why must man live for years as a burden on the earth? So much rice or wheat consumed year after year, with no return in joy or peace to himself or others? The petromax light will shine bright only when you pump air vigorously; your light too is dim and well near out; therefore, pump vigorously, that is to say, engage yourself in spiritual practice and illumine your mind better and spread light on all who come near you. (Divine Discourse, Feb 19, 1966)
If you are only aware of the extent of the goodness of your previous births that has brought you to the stage of your present life, you will never waste this present life. - Baba
மனிதன் இறைவனை நாடுவதற்கு முயற்சிக்கவில்லை என்றாலும் சாந்தி, சந்தோஷம், சௌக்கியம், சுதந்திரம் ஆகியவற்றைப் பெறுவதற்காவது முயற்சிக்க வேண்டும். அவன் இந்நாளில் இவற்றை நாடுவதும் இல்லை; அவற்றை எவ்வாறு பெறுவது என்று அறிந்துகொள்ள முயல்வதும் இல்லை! பம்பரம் இடைவிடாது சுழன்று கொண்டே இருக்கிறது; அதற்கு ஓய்வே இல்லை; அதைப்போல மனிதனும் எப்போதும் ஏங்கித் தவித்துக் கொண்டு இருக்கிறான்; இந்தச் சுழற்சியிலிருந்து அவனுக்கு நிவாரணமே இல்லை. தற்சமயம் அவனுக்குக் கிடைக்கும் சாந்தி சந்தோஷங்களும் கணப்பொழுதே இருக்கின்றன; இப்போது இருக்கிறது, அடுத்த கணம் மறைந்துவிடுகிறது. துக்கம் சந்தோஷத்தைத் தடுத்து நிறுத்தி விடுகிறது; சந்தோஷம் என்பது துக்கமின்றி இருப்பதே அன்றி வேறில்லை. வருடக்கணக்காக அதிகளவில் அரிசியோ கோதுமையோ சாப்பிட்டுக்கொண்டு, தனக்கோ பிறருக்கோ சுகசாந்தி இல்லாமல், பூமிக்கு பாரமாக மனிதன் நீண்ட காலத்திற்கு ஏன் வாழ வேண்டும்? பெட்ரோமாக்ஸ் விளக்கிற்கு பலமாக காற்றடித்தால் தான் அது பிரகாசமாக எரியும்; தற்போது உங்களுள் இருக்கும் உள்ளொளியும் மங்கலாகவும் அணைந்துபோய்விடக் கூடிய நிலையிலும் உள்ளது. எனவே அதற்கும் பலமாக காற்றடிக்க வேண்டியுள்ளது - அதாவது, ஆன்மிக சாதனையில் ஈடுபட்டு, மனதில் ஞான ஒளியை ஏற்றி, உங்கள் அருகில் வருவோர் அனைவரின் மீதும் அந்த ஒளியைப் பரவச் செய்திடுங்கள். (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 19, 1966)
உண்மையில் முற்பிறவிகளில் நீங்கள் ஈட்டிய புண்ணியத்தின் பலனால் தான் இப்பிறவியில் இந்நிலையை அடைந்திருக்கிறீர்கள் என்பதை அறிந்திருந்தால், நீங்கள் இப்பிறவியை ஒருபோதும் வீணடிக்க மாட்டீர்கள். - பாபா