azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 05 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 05 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Man aspires for bliss, but how can he attain it? Where there is faith, there is love. Where there is love, there is peace. Where there is peace, there is truth. Where there is truth, there is God. Where there is God, there is bliss. The path of spirituality starts with faith and ends with bliss. Bliss cannot be obtained from materialistic pleasures or people of the world. It can be experienced only when the five senses are put to proper use. Today, man reads sacred books to attain bliss, but all these books have their own limitations. One cannot get infinite bliss by studying the scriptures. One must study an ‘infinite book’ in order to experience infinite bliss. This world itself is an infinite book. There are so many things to be learnt from this world. Who are your friends? Not your classmates or roommates. Only God is your true and eternal friend. It is only with the help of this friend that you will be able to study the infinite book, the world. (Divine Discourse, May 30, 1999)
God alone is totally selfless as friend and benefactor. - Baba
மனிதன் ஆனந்தம் பெறவேண்டுமென விழைகிறான். ஆனால் அதை எவ்வாறு அடைவது? எங்கு நம்பிக்கை இருக்கிறதோ, அங்கு ப்ரேமை இருக்கும். எங்கு ப்ரேமை இருக்கிறதோ, அங்கு சாந்தி இருக்கும். எங்கு சாந்தி இருக்கிறதோ, அங்கு சத்தியம் இருக்கும். எங்கு சத்தியம் இருக்கிறதோ, அங்கு இறைவன் இருப்பான். எங்கு இறைவன் இருக்கிறானோ, அங்கு ஆனந்தம் இருக்கும். ஆகவே, ஆன்மிகப்பாதை என்பது நம்பிக்கையில் தொடங்கி ஆனந்தத்தில் நிறைவடைகிறது. பொருள்சார்ந்த சுகங்களிலிருந்தோ இவ்வுலக மக்களிடமிருந்தோ ஆனந்தத்தைப் பெற முடியாது. ஐம்புலன்களையும் முறையாகப் பயன்படுத்துவதால் மட்டுமே ஆனந்தத்தை அனுபவிக்க இயலும். இன்று மனிதன் ஆனந்தத்தை அடைவதற்கு புனித நூல்களைப் பாராயணம் செய்கிறான்; ஆனால் இப்புத்தகங்கள் அனைத்தும் ஓரளவுக்கே பயனளிக்க வல்லவை. ஒருவர் சாஸ்திரங்களைக் கற்பதால் எல்லையற்ற ஆனந்தத்தைப் பெற முடியாது. ஒருவர் எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவிப்பதற்கு 'எல்லையற்ற புத்தகத்தைப்' படித்தாக வேண்டும். இவ்வுலகமே ஒரு எல்லையற்ற புத்தகம் தான். இவ்வுலகத்திடமிருந்து கற்றுக்கொள்வதற்கு எவ்வளவோ இருக்கிறது. உங்களுடைய நண்பர்கள் யார்? உங்கள் வகுப்புத்தோழர்களோ அல்லது உங்களுடன் தங்குபவர்களோ இல்லை. இறைவன் மட்டுமே உங்களுடைய உண்மையான சாஸ்வதமான நண்பனாவான். இந்த நண்பனின் உதவியால் மட்டுமே இவ்வுலகமெனும் எல்லையற்ற புத்தகத்தைப் படிக்க இயலும். (தெய்வீக அருளுரை, மே 30, 1999)
இறைவன் ஒருவனே முற்றிலும் சுயநலமற்ற நண்பனாகவும் நன்மை பயப்பவனாகவும் விளங்குகின்றான். - பாபா