azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 03 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 03 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Iron gets rusted in the company of dust, and, as a result, it loses its strength. But its strength is restored when it is put in fire. First of all, you have to remove the dust from your mind. What is the dust? Dust is bad feelings that arise in one from bad company. It is only because of bad company that you get bad thoughts. Therefore, it is said, ‘Tell me your company and I shall tell you what you are’. Take time and enquire, but seek only the company of good people. When you are in a good position, everybody will come to you, calling you a good boy. But when you suffer a downfall, everybody will run away from you without even saying goodbye. This is not true friendship. What is true friendship? A true friend is one who follows you like a shadow even in times of difficulties and suffering. (Divine Discourse, Jul 23, 1996)
When you throw a stone of a good or bad thought in the lake of your mind, its effect will spread to all the limbs of your body. - Baba
இரும்பு தூசியுடன் சேருவதால் துருப்பிடித்து, தன் வலிமையை இழந்துவிடுகிறது. ஆனால் அதை நெருப்பில் இட்டவுடன், தன் வலிமையைத் திரும்பப் பெற்றுவிடுகிறது. முதலில் நீங்கள் மனதில் உள்ள தூசியை அகற்ற வேண்டும். இங்கு தூசி என்றால் என்ன? தூசி என்பது தீயவர்களின் சகவாசத்தால் ஒருவருள் எழும் கெட்ட உணர்வுகளே. தீய சகவாசத்தால் தான் தீய சிந்தனைகள் எழுகின்றன. ஆகவே, “உங்களுடைய நண்பன் யார் என்று சொல்லுங்கள்; நீங்கள் யார் என்று நான் சொல்கிறேன்” என்று கூறப்படுகிறது. நிதானமாக ஆராய்ந்து, நல்லவர்களின் நட்பையே நாடுங்கள். நீங்கள் நல்ல நிலையில் இருக்கும்போது எல்லோரும் நீங்கள் நல்லவர் என்று புகழ்பாடிக்கொண்டு உங்களிடம் வருவார்கள். ஆனால் நீங்கள் வீழ்ச்சியடையும் போது, எல்லோரும் சொல்லாமல் கொள்ளாமல் உங்களை விட்டு ஓடிவிடுவார்கள். இது உண்மையான நட்பு இல்லை. உண்மையான நட்பு என்றால் என்ன? துன்பங்களிலும் துயரங்களிலும் கூட உங்களை நிழலாகப் பின்தொடர்பவரே உண்மையான நண்பர். (தெய்வீக அருளுரை, ஜூலை 23, 1996)
உங்கள் மனமெனும் ஏரியில் நல்ல அல்லது கெட்ட எண்ணம் எனும் ஒரு கல்லை எறிந்தால், அதன் விளைவு உங்கள் உடலின் அனைத்து அங்கங்களுக்கும் பரவும். - பாபா