azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 27 Feb 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 27 Feb 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Students should realise the importance of service to realise the Divine. It makes one's life significant and purposeful. The first requisite for service is the elimination of the ego. Divine grace and the power it can confer can be acquired by rendering social service in a selfless spirit. Students! Except for the Grace of God, nothing else will stand by you, for long. Develop faith in this never-failing source of strength and support. The famous wrestler King Kong, who could stop a fast-moving car, died in a car accident! That reveals the limitations of muscle power. How many kings have left the earth, leaving no trace of their wealth or power? Do not postpone the cultivation of devotion to God. Start serving God through service to fellow beings. Every act of service, however small, is service to the Divine. (Divine Discourse, Jul 24, 1983)
The more you serve God, the more the bliss you will experience. - Baba
தெய்வத்தை உணருவதற்கு சேவையின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர வேண்டும். இது ஒருவரின் வாழ்க்கையை தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும் பயனுள்ளதாகவும் ஆக்குகிறது. சேவைக்கான முதன்மைத் தேவை அகந்தையை நீக்குவதாகும். தன்னலமற்ற உணர்வுடன் சமூக சேவை செய்வதன் மூலம் இறையருளையும் அதன் அருட்சக்தியையும் பெறலாம். மாணவ மணிகளே! இறையருளைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு நீண்ட காலம் துணை நிற்காது. ஆற்றலும் ஆதரவும் தர வல்ல, நம்மைக் கைவிடாத இந்த ஆதாரத்தின் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். வேகமாக செல்லும் காரை தடுத்து நிறுத்தும் வல்லமை கொண்ட பிரபல மல்யுத்த வீரர் கிங்காங் கார் விபத்தில் மரணம் அடைந்தார்! இது உடல் வலிமையின் வரையறையை வெளிப்படுத்துகிறது. எத்தனை மன்னர்கள் தங்கள் செல்வம் மற்றும் அதிகாரத்தின் சுவடு கூட இல்லாமல் பூமியை விட்டுச் சென்றுள்ளார்கள்? இறைவனிடம் பக்தியை வளர்த்துக் கொள்வதைத் தள்ளிப் போடாதீர்கள். சக மனிதர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் இறைவனுக்கு சேவை ஆற்றத் தொடங்குங்கள். ஒவ்வொரு சேவையும், எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது இறைவனுக்காகவே ஆற்றப்படும் சேவையாகும். (தெய்வீக அருளுரை, ஜூலை 24, 1983)
நீங்கள் எந்த அளவிற்கு இறைவனுக்குச் சேவை செய்கிறீர்களோ, அந்த அளவிற்கு ஆனந்தத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள். - பாபா