azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 21 Feb 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 21 Feb 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
People are unable to perceive Divinity everywhere because of two defects: (1) They overlook their innumerable mistakes, (2) They magnify the minutest mistake of others. One can attain Divinity only when one stops hiding their mistakes and highlighting the faults of others. It is a great sin to search for others' faults. Instead, look for your own. Consider your smallest defect as a great blunder and try to rectify the same. Ignore the faults in others however big they may be. Do not criticise others; instead, criticise and question yourself - Having been born as a human being, is this the way I should behave? The true spiritual practice lies in finding out one's own mistakes and correcting them. It involves giving up evil tendencies and developing noble traits. That is 'sa-dhana’ (spiritual practice). 'Sa ' symbolises Divinity, which is the embodiment of all forms of wealth (dhana). (Divine Discourse, Mar 12, 2002)
You must develop the habit of examining yourself and correcting yourself. Self-correction and self-punishment are as important as Self-realisation. - Baba
இரண்டு குறைபாடுகள் காரணமாய் இறைத்தன்மையை எங்கும் நீக்கமற உணர முடியாமல் மனிதர்கள் இருக்கிறார்கள்: 1) அவர்கள் தங்களுடைய எண்ணற்ற தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, 2) பிறருடைய சிறு தவறுகளைக் கூட பூதாகரமாக்குவது. ஒருவர் தன்னுடைய தவறுகளை மறைத்து, பிறருடைய குறைகளை முன்னிலைப்படுத்துவதை நிறுத்தினால்தான் இறைத்தன்மையைப் பெற முடியும். மற்றவர்களின் குறைகளைத் தேடுவது பெரும் பாவமாகும். மாறாக, உங்களுடைய குறைகளைத் தேடுங்கள். உங்களுடைய மிகச்சிறியதான குறையையும் ஒரு மிகப்பெரிய தவறாகக் கருதி அதைச் சரிசெய்ய முயன்றிடுங்கள். பிறருடைய குறைகள் எவ்வளவு பெரிதாக இருப்பினும், அவற்றை எம்மாத்திரமும் லட்சியம் செய்யாதீர்கள். பிறரை விமர்சிக்காதீர்கள்; மேலும் ‘மனிதனாகப் பிறந்து, மனித குணங்களைக் கொண்டு, இப்படிப்பட்ட தகாத பணியை நான் செய்யலாமா’ என உங்களை நீங்களே கேள்வி கேட்டு விமர்சித்துக்கொள்ளுங்கள். உண்மையான ஆன்மிக சாதனை என்பது ஒருவரின் தவறுகளைத் தானே கண்டறிந்து அவற்றைத் திருத்திக் கொள்வதில் உள்ளது. அது, தீய போக்குகளை விடுத்து உன்னத பண்புகளை வளர்க்கும் ஈடுபாட்டை உள்ளடக்கியதாகும். அதுவே ‘சா-தனா’. ‘சா’ என்பது, சகல ஐஸ்வர்யத்தின் (தனா) ஸ்வரூபமாக விளங்கும், இறைவனைக் குறிக்கிறது. (தெய்வீக அருளுரை, மார்ச் 12, 2002)
உங்களை நீங்களே பரிசோதித்து திருத்திக்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். மெய் உணர்தல் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் சுய திருத்தமும், சுய தண்டிப்பும் ஆகும். - பாபா