azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 14 Feb 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 14 Feb 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
All the objects in this visible universe are extremely beautiful, attractive and pleasing. The Divine is immanent in the entire cosmos. The cosmos is filled with love. The Supreme Self is the embodiment of love. Hence if love encounters love they merge. Thus if you develop your love you become eligible to achieve oneness with the Divine. Love exists for love and nothing else. It is spontaneous and imparts delight. Everything is permeated by love. Love sees with the heart and not through the eyes. It listens not through the ears but by the tranquillity of the heart. It speaks not with the tongue but out of compassion. Compassion, kindness and love are separate words which mean the same thing. Love has many synonyms. Love can emanate only from the heart and not from any other source. Love is immortal, nectarous, blissful and infinite. A heart filled with love is boundless. Just as rivers with different names and forms merge in the ocean and become one with it, love in many forms enters the ocean of the heart and gets identified with it. Love can conquer anything. Selfless, pure, and unalloyed love leads man to God. (Divine Discourse, Dec 25, 1995)
That alone is true love which can fill man with enduring bliss. - Baba
கண்களுக்குப் புலப்படும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களும் மிகவும் அழகானவை, கவர்ச்சியானவை, இனிமையானவை. ப்ரபஞ்சமனைத்திலும் பரமாத்மா நீக்கமற நிறைந்துள்ளான். பிரபஞ்சம் ப்ரேமையால் நிறைந்துள்ளது. பரமாத்மா, ப்ரேமையின் திருவுருவமே. எனவே, ப்ரேமை, ப்ரேமையைச் சந்திக்கும்போது, அவை இரண்டறக் கலந்து விடுகின்றன. இவ்வாறு நீங்கள் உங்களுடைய ப்ரேமையை வளர்த்துக் கொண்டால், பரமாத்மாவுடன் ஐக்கியமாகும் தகுதியைப் பெறுகிறீர்கள். ப்ரேமை ப்ரேமைக்காகவே இருக்கிறதே தவிர வேறு எதற்காகவும் அல்ல. அது தன்னிச்சையானதும் ஆனந்தமளிப்பதுமாகும். ப்ரேமை அனைத்திலும் வியாபித்திருக்கிறது. ப்ரேமை இதயத்தால் பார்க்கிறதே தவிர, கண்களால் அல்ல. அது செவிகளால் அன்றி, இதயத்தின் அமைதியால் கேட்கிறது. அது நாவினால் அன்றி, கருணையால் பேசுகிறது. கருணை, தயை, ப்ரேமை ஆகியவை வெவ்வேறு வார்த்தைகளாக இருந்தாலும், அவை அனைத்தின் பொருள் ஒன்றே. ப்ரேமை எனும் சொல் பல ஒத்த சொற்களைக் கொண்டுள்ளன. ப்ரேமை, இதயத்திலிருந்துதான் வெளிப்படுமே தவிர, வேறு எங்கிருந்தும் அல்ல. ப்ரேமை அழிவற்றது, அளவற்றது, அமிர்தமயமானது, ஆனந்தமயமானது. ப்ரேமை நிறைந்த இதயம் எல்லையற்றது. எவ்வாறு பல பெயர்கள் கொண்ட நதிகள் கடலில் கலந்து, அதோடு சங்கமம் ஆகிவிடுகின்றனவோ, பல ரூபங்களைக் கொண்ட ப்ரேமை, இதயமெனும் கடலில் சங்கமமாகி, அதனுடன் ஒன்றாகி விடுகிறது. ப்ரேமையால் எதையும் வெல்ல முடியும். தன்னலமற்ற, பரிசுத்தமான, களங்கமற்ற ப்ரேமை மனிதனை இறைவனிடம் இட்டுச் செல்கிறது. (தெய்வீக அருளுரை, டிசம்பர் 25, 1995)
மனிதனை நிரந்தரமான ஆனந்தத்தால் நிறைக்கக்கூடிய ஒன்றே உண்மையான ப்ரேமையாகும். - பாபா