azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 11 Feb 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 11 Feb 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

There is a story that Lakshmi asked Lord Vishnu one day whether mankind will ever turn towards God since He had provided them with the skills and materials necessary for comfortable living. Vishnu replied, "I have endowed them with two qualities, which will draw them towards Me: Greed and Discontent." When man turns towards God, detaching himself from the bondage to the world, he will no more suffer from greed and discontent. Between the two embankments, ‘attachment to the Divine’ and ‘detachment from the mundane’, the stream of life can flow unimpaired in speed and direction, towards the Ocean of Divine Grace. See yourself as Divine; see others as Divine. Turn away from all else in you and in others. That is the essence of sadhana (spiritual practices). - Divine Discourse, Aug 16, 1968.
One who wishes to realise the Divine should cultivate contentment. - Baba
ஒரு நாள் மஹாலட்சுமி பகவான் விஷ்ணுவிடம், வசதியாக வாழ்வதற்குத் தேவையான திறன்களையும் பொருட்களையும் இறைவன் மனிதர்களுக்கு வழங்கிவிட்டதால், மனிதகுலத்தின் கவனம் என்றாவது இறைவன் பக்கம் திரும்புமா என்று கேட்டதாக ஒரு கதை உள்ளது. அதற்கு மஹாவிஷ்ணு, "நான் அவர்களுக்கு அளித்துள்ள இரண்டு குணங்களான பேராசையும், அதிருப்தியும் அவர்களை என்பால் ஈர்த்து விடும்" என்று பதிலளித்தாராம். எப்போது மனிதன் உலக பந்தங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, இறைவனை நோக்கித் திரும்புகிறானோ, அதன்பின் அவன் பேராசையாலும் அதிருப்தியாலும் பாதிக்கப்படமாட்டான். ‘இறைவன் மீதான பற்று’, ‘உலகியலானவையின் மீதான பற்றின்மை’ என்ற இரண்டு கரைகளுக்கு இடையே வாழ்க்கை எனும் நீரோட்டம் தங்குதடையின்றி வேகமாக இறையருள் எனும் சாகரத்தை நோக்கிப் பாய்ந்து செல்ல முடியும். உங்களை நீங்கள் தெய்வமாகக் காணுங்கள்; பிறரையும் தெய்வமாகக் காணுங்கள். உங்களிடமும் மற்றவர்களிடமும் உள்ள மற்ற எல்லாவற்றையும் விட்டு விலகிவிடுங்கள். அதுதான் ஆன்மிக சாதனையின் சாராம்சமாகும். (தெய்வீக அருளுரை, ஆகஸ்ட் 16, 1968)
தெய்வத்தை உணர விழைபவர் மனநிறைவை வளர்த்துக் கொள்ள வேண்டும். - பாபா