azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 09 Feb 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 09 Feb 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
We should never regard wealth as the most important thing in our life. We should regard dharma as the most important. We should thereby earn the grace of God. You should have money which is enough to meet your essential requirements. Anything more than that should be used for charity and such other good things. Today, we do see many situations amongst students by which they get spoilt by possessing an excess of money. In the first instance, it may look very difficult to get on with a minimum amount of money; but if they can control their desire for money, they will be very happy and peaceful thereafter. When students are really in need of ten rupees, they prepare themselves to ask for twenty rupees. When the children ask for twenty rupees, the parents should give only ten rupees. This is very essential. Even though the son feels hurt momentarily, he will get strength later on. If he is given twenty rupees when he actually needs only ten, he will get bad friends and spend that money on them. (Summer Showers in Brindavan 1973, Ch 17)
It is the parents who lead children to the highest levels or cause their fall to the lowest depths. - Baba
ஒருபோதும் செல்வத்தை நம் வாழ்வின் மிக முக்கியமான விஷயமாகக் கருதாமல் தர்மத்தை மிகவும் முக்கியமானதாகக் கருத வேண்டும். அதன் மூலம் நாம் இறைவனின் அருளைப் பெற வேண்டும். உங்கள் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவிற்கு பணம் இருந்தால் போதுமானது. மீதமுள்ள பணத்தை தான தர்மங்களுக்கும், பிற நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்த வேண்டும். இன்று, மாணவர்கள் மத்தியில் அதிகமாக பணம் புழங்குவதனால் அவர்கள் கெட்டுப்போகும் சூழ்நிலைகள் பலவற்றை நாம் காண்கிறோம். ஆரம்பத்தில், குறைந்த பணத்துடன் இருப்பது கடினமாகத் தோன்றலாம்; ஆனால் அவர்கள் பண ஆசையைக் கட்டுப்படுத்த முடிந்தால், எதிர்காலத்தில் அவர்கள் மிக மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருப்பார்கள். இன்று, மாணவர்களுக்கு பத்து ரூபாய் மட்டுமே தேவைப்படும்போது, இருபது ரூபாய் கேட்பதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள். மகன் இருபது ரூபாய் கேட்டால், பெற்றோர்கள் பத்து ரூபாய் மட்டுமே கொடுக்க வேண்டும். இது மிகவும் அத்தியாவசியமானதாகும். அந்த சமயத்தில் வேண்டுமானால் அவனுக்கு சற்று கஷ்டமாக இருக்கலாம், ஆனால் எதிர்காலத்தில் நன்றாக இருப்பான். அவனுக்கு நிஜமாகவே பத்து ரூபாய் மட்டுமே தேவைப்படும்போது இருபது ரூபாய் கொடுத்தால், பத்து ரூபாயை தான் பயன்படுத்திக்கொண்டு, மீதமுள்ள பத்து ரூபாயை நண்பர்களுடன் சேர்ந்து தீய வழிகளில் செலவு செய்து, தகாத செயல்களில் இறங்கி விடுவான். (பிருந்தாவனில் கோடை மழை, 1973, அத்தியாயம்-17)
குழந்தைகள் மிக உன்னத நிலையை அடைவதற்கோ, மிகக் கீழான நிலைக்கு வீழ்வதற்கோ பெற்றோர்களே காரணமாக இருக்கின்றனர். - பாபா