azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 02 Feb 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 02 Feb 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

The mind is a wonder, its antics are even more surprising. It has no distinct form or shape. It assumes the shape or form of the thing it is involved in. To wander from wish to wish, and flit from one desire to another, is its nature. So, it is the cause of loss and grief, of elation and depression. Its effects are both positive and negative. It is worthwhile for man to know the characteristics of the mind and the ways to master it for one's ultimate benefit. The mind is prone to gather experiences and store them in the memory. It does not know the art of giving up. Nothing is cast away by the mind. As a consequence, grief, anxiety and misery continue simmering in it. If only the mind can be taught tyaga (sacrifice), you can also become a yogi (spiritually serene person). - Divine Discourse, Jan 08, 1983
Assign to your mind the task of serving the Lord and it will grow tame. - Baba
மனம் ஓர் அதிசயம், அதன் ஆட்டபாட்டங்களோ அதைவிட ஆச்சரியம். தனித்துவமான ஓர் உருவமோ வடிவமோ அதற்கு இல்லை. அது சம்பந்தப்பட்ட விஷயத்தின் வடிவம் அல்லது உருவத்தை அது எடுத்துக்கொள்கிறது. விருப்பத்திற்கு விருப்பம் அலைந்து திரிவதும், ஒர் ஆசையில் இருந்து மற்றொன்றிற்கு தாவுவதும்தான் அதன் இயல்பு. எனவே, மனமே கஷ்ட நஷ்டத்திற்கும், துக்க சந்தோஷத்திற்கும் மூல காரணமாகும். அதன் விளைவுகள் நேர்மறை, எதிர்மறை என இருவிதமாகவும் உள்ளன. இந்த மனதின் குணாதிசயங்களையும், ஒருவரின் இறுதிப் பலனை அடைய உதவும் வகையில் அதை வெற்றிகொள்ளும் வழிமுறைகளையும் மனிதன் அறிந்து கொள்வது மிக்க நலம் பயப்பதாகும். அனுபவங்களைச் சேகரித்து அவற்றை நினைவகத்தில் சேமித்து வைக்க முனைவது மனதின் தன்மையாகும். விட்டுக்கொடுக்கும் கலை அதற்குத் தெரியாது. மனதால் எதுவும் தூக்கி எறியப்படுவதில்லை. அதன் விளைவாக, துக்கமும், கவலையும், துயரமும் அதில் தொடர்ந்து கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த மனதிற்கு மட்டும் தியாகத்தைக் கற்பிக்க முடிந்தால், நீங்களும் ஒரு யோகி ஆக முடியும். (தெய்வீகச் சொற்பொழிவு, ஜனவரி 08, 1983)
இறைவனுக்கு சேவை செய்யும் பணியை உங்கள் மனதிற்கு கொடுத்திடுங்கள்; அது அடங்கி விடும். - பாபா