azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 29 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 29 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
As a matter of fact, there are no atheists at all, but only ignorant people. They do not know that God is their innermost core. They deny God because they do not know that their very breath is God. It is like fish denying the existence of water. You have to pity them for their colossal ignorance, not get angry with them for saying things you do not like. God dwells in you as ananda (divine bliss); that is why you seek ananda automatically, always and in every object around you. To become as full of ananda as Radha (the consort of Lord Krishna) or as Ramakrishna Paramahamsa or as Vivekananda, you have to sacrifice your ego and saturate yourself with the consciousness that the Lord is your very being. (Divine Discourse, Aug 13, 1964)
Theists and atheists are really one. Atheists are like buds of flowers and theists are like flowers that have blossomed. - Baba
உண்மையில் நாத்திகர்கள் என்று எவருமே இல்லை, ஆனால் அறியாத மனிதர்கள் தான் இருக்கிறார்கள். இறைவன்தான் தங்களுடைய அந்தராத்மா என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்களுடைய உயிர்மூச்சே இறைவன்தான் என்பதை அறியாததால் அவர்கள் இறைவன் இல்லை என்று மறுக்கிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால், தண்ணீரில் உயிர்வாழும் மீன் தண்ணீரே இல்லை என்று மறுப்பதைப் போன்றதாகும். அவர்களின் பெரும் அறியாமைக்காக நீங்கள் பரிதாபப்பட வேண்டுமேயன்றி, உங்களுக்குப் பிடிக்காததைக் கூறுவதால் அவர்கள் மீது கோபப்படக்கூடாது. இறைவன் உங்களுள் தெய்வீகப் பேரானந்தமாக உறைகிறான்; அதனால்தான், எப்போதும், உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பொருளிலும் நீங்கள் இயல்பாகவே ஆனந்தத்தைத் தேடுகிறீர்கள். ராதையைப் போல, ராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தரைப் போல ஆனந்தம் நிறைந்தவராக ஆவதற்கு, நீங்கள் உங்களுடைய அகந்தையை விடுத்து, இறைவனே உங்களுடைய அந்தராத்மா என்ற உணர்வில் தோய்ந்திருக்க வேண்டும். (தெய்வீக அருளுரை, ஆகஸ்ட் 13, 1964)
உண்மையில் ஆஸ்திகர்களும் நாத்திகர்களும் ஒன்றுதான். நாத்திகர்கள் பூக்களின் மொட்டுகளைப் போன்றவர்கள், ஆஸ்திகர்களோ மலர்ந்த பூக்களைப் போன்றவர்கள். - பாபா