azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 20 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 20 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
If one loses wealth, he may regain it, by some ruse or other. If he loses health, some doctor might prescribe a tonic to win it back. If one loses status and authority, he may by sheer luck gain them back. If virtue is lost, it is lost forever; nothing can restore the pristine purity. So one has to be ever vigilant and never slacken. The greatest of the virtues is Love. Love is the basis of character. You may have all other desirable things in plenty; but, if you have no character, that is to say, virtue, which is all strung on Love you can have no genuine peace. Money comes and goes! But, morality? It comes and grows! Morality has to be grown in the heart by feeding it with Love, only then can we have justice, security, law and order. If love declines among the people, nations will weaken and mankind will perish. (Divine Discourse, Feb 03, 1972)
I shall be happy when each one of you becomes a Lamp of Love, shedding virtue and purity all around you. - Baba
ஒருவர் செல்வத்தை இழந்தால், ஏதோ ஒரு வழியில் அதை மீண்டும் பெறலாம். உடல்நலத்தை இழந்தால், அதை மீண்டும் பெறுவதற்கு மருத்துவர் ஒரு டானிக்கை பரிந்துரைக்கலாம். ஒருவர் அந்தஸ்தையும் அதிகாரத்தையும் இழந்தால், அதிர்ஷ்டவசத்தால் அவற்றைத் திரும்பவும் பெறலாம். ஆனால் நல்லொழுக்கத்தை இழந்துவிட்டால், அதை என்றென்றைக்கும் இழந்துவிட்டதாகி விடும்; இழந்த புனிதத்துவத்தை எவற்றாலும் மீட்டுத் தர இயலாது. எனவே, ஒருவர் எப்போதும் விழிப்புடன் இருப்பதோடு, ஒருபோதும் கவனக்குறைவாக இருக்கக் கூடாது. நற்பண்புகளில் தலைசிறந்தது ப்ரேமையே. ப்ரேமையே குணநலனின் ஆதாரமாக விளங்குகிறது. நீங்கள் விரும்பும் மற்ற பொருட்கள் அனைத்தையும் ஏராளமாக வைத்திருக்கலாம்; ஆனால், உங்களிடம் ப்ரேமையில் கோர்க்கப்பட்ட நற்குணநலன், அதாவது நல்லொழுக்கம் இல்லை என்றால், நீங்கள் உண்மையான நிம்மதியைப் பெற முடியாது. பணம் வரும் போகும்! ஆனால் நல்லொழுக்கம்? அது வரும், வளரும்! இதயத்தில் ப்ரேமையை ஊட்டுவதன் மூலமாக அறநெறியை வளர்க்க வேண்டும்; அப்போதுதான் நீதி, பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு ஆகியவற்றை நாம் பெற முடியும். மக்களிடையே ப்ரேமை குறைந்தால் தேசங்கள் வலுவிழந்து மனிதகுலம் அழிந்துவிடும். (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 03, 1972)
நீங்கள் ஒவ்வொருவரும் ப்ரேம தீபமாக மாறி, உங்களைச் சுற்றி நல்லொழுக்கத்தையும் தூய்மையையும் பரவச்செய்யும் போது நான் மகிழ்ச்சி அடைவேன். - பாபா