azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 18 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 18 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
For a world pursuing ever-receding happiness and peace which as a consequence is blinded by the fog of disappointment and disease, the Divine is the pillar of light that indicates the path to progress. Man has inherited this realm of work, this world which is but a vast factory, where he himself is fashioned from manhood to Godhood if only he applies his energy and skill diligently to that transformation. Man must work every moment of his life; he cannot avoid this burden. His very existence depends upon action, exertion and work. And work results in either good or bad, big or small, powerful or paltry. So, man has to be active on the right lines in order to avoid evil and pain. That is the duty he owes to himself. There may be differences among men in physical strength, financial status or intellectual acumen, but all are equal in the eye of God; all have the right and the potential to achieve the goal of merging in Him. (Divine Discourse, Feb 03, 1972)
People are bound by action and sustained by action. They can achieve anything through action. Their accomplishment lies in their skill in doing actions. - Baba
கைக்கு எட்டாமல் சென்றுக்கொண்டே இருக்கும் சாந்தி, சந்தோஷங்களுக்காகத் தேடி அலைந்து, அதன் விளைவாக ஏமாற்றம் மற்றும் நோய் எனும் மூடுபனியால் மறைக்கப்பட்ட உலகிற்கு, தெய்வமே முன்னேற்றப் பாதைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகும். மனிதன் தன் மரபுரிமையாகப் பெற்றுள்ள இந்த உலகம் எனும் கர்மபூமி ஓர் விசாலமான தொழிற்சாலை; இதில் மனிதன் மனிதத்துவத்தில் இருந்து தெய்வத்துவத்திற்கு உயர்கிறான்; அத்தகைய நல்மாற்றத்திற்கு தன்னுடைய ஆற்றலையும், திறனையும் விடாமுயற்சியுடன் பயன்படுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும். மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு கணமும் கர்மாவில் ஈடுபட்டே ஆக வேண்டும்; இந்தப் பொறுப்பை அவன் தவிர்க்க முடியாது. செயல்பாடு, உழைப்பு, கர்மா ஆகியவற்றைப் பொறுத்தே அவனுடைய வாழ்க்கை இருக்கிறது. கர்மா என்பது நல்லதோ-கெட்டதோ, பெரியதோ-சிறியதோ, வலியதோ-அற்பமானதோ ஆன விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே, தீமையையும் துன்பத்தையும் தவிர்க்க மனிதன் சரியான பாதையில் செல்ல வேண்டும். இது அவன் தனக்கே ஆற்றிக்கொள்ள வேண்டிய கடமையாகும். மனிதர்களிடையே, உடல்வலிமை, நிதி நிலைமை அல்லது புத்திகூர்மையில் வித்தியாசங்கள் இருக்கலாம், ஆனால் இறைவனின் பார்வையில் அனைவரும் சமமே; இறைவனுடன் ஐக்கியமாகும் குறிக்கோளை அடைவதற்கான உரிமையும் திறமையும் அனைவருக்கும் இருக்கிறது. (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 03, 1972)
மனிதர்கள் கர்மாவினால் பிணைக்கப்பட்டு, கர்மாவினாலேயே பேணப்படுகின்றனர். அவர்கள் கர்மாவின் மூலம் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். கர்மாக்களைத் திறம்படச் செய்வதில் தான் அவர்களின் சாதனை இருக்கிறது. - பாபா