azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 17 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 17 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
The physical body for whose sake you crave all this comfort and luxury is subject to damage and decay. One day, it will become food for dogs and jackals. The Lord, on the other hand, gives joy and the thrill of holy love. Surrender your heart to Him; He desires nothing else from you. He can be won by no other means, by neither unlimited scholarship nor pompous vows nor colourful rituals. Of the span of human life, one half is wasted in sleep; the other is frittered away in satisfying stupid desires, in the helpless ignorance of childhood and boyhood, in misery, travail, and illness, and in the inanity of old age. Devote yourself to some worthwhile activity and beware of misusing them for the silly pursuit of sensual pleasure. Use your precious years for the contemplation of the glory of the Lord, for fixing your mind on His lotus feet ever more firmly, and thus for transporting yourself across the vast ocean of birth and death. Therefore, practice at all times and under all conditions, with love and devotion, remembrance of the name of the Lord. (Prasanthi Vahini, Ch 26)
God’s Name is a thunderbolt that will pulverize mountains of sin. - Baba
எந்த ஓர் உடலுக்காக அனைத்து சுக சௌக்கியங்களும் ஆடம்பர வசதிகளும் வேண்டுமென நீங்கள் ஏங்குகிறீர்களோ அது நசிந்து நாசமடையக் கூடிய ஒன்று. என்றோ ஒருநாள் அது நாய்களுக்கும், நரிகளுக்கும் இரையாகப் போகிறது. மறுபுறம், இறைவனோ, பவித்திரமான இறையன்பின் ஆனந்தப் பரவசத்தைத் தருகின்றான். உங்களுடைய இதயத்தை அவனுக்கு அர்ப்பணித்து விடுங்கள்; அவன் வேறு எதையும் கோருவதில்லை. இந்த அர்ப்பணிப்பின் மூலமே அவனை அடைய முடியும், வேறு எந்த வழியிலும் அல்ல - அளவற்ற அறிவாற்றலாலோ அல்லது ஆடம்பரமான விரதங்களாலோ அல்லது வண்ணமயமான சடங்குகளாலோ அல்ல. மனிதனுடைய வாழ்க்கையில், ஒரு பாதி உறக்கத்திலேயே வீணாகி விடுகிறது; எஞ்சிய பகுதி, மதிகெட்ட ஆசைகளைப் பூர்த்தி செய்வதிலும், பால்ய மற்றும் இளம் வயதின் அறியாமையிலும், கஷ்ட நஷ்டங்கள், நோய்கள் ஆகியவற்றிலும், முதுமைகால பித்திலும் வீணாய் கழிந்து விடுகிறது. மீதமுள்ள கொஞ்ச காலமே உங்கள் வசம் இருக்கும்போது, அதை பயன்மிகு சத்கர்மாக்களுக்கு அர்ப்பணியுங்கள்; அதை சிற்றின்பங்களுக்குப் பின்னால் அற்பத்தனமாக அலைந்து திரிவதற்குத் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதில் எச்சரிக்கையாக இருங்கள். இந்தக் குறைந்த கால பொன்னான வருடங்களை இறைவனின் மகிமையைத் தியானிப்பதிலும், அந்த பரமாத்மாவின் தாமரைமலர்ப் பாதங்களை மேன்மேலும் இறுகப் பற்றிக்கொண்டு பக்தி செலுத்துவதிலும், அதன்மூலம் உங்களுடைய ஜனன மரணமெனும் பரந்தகன்ற மிகப்பெரும் சமுத்திரத்தைக் கடக்கவும் பயன்படுத்துங்கள். எனவே, எல்லா நேரங்களிலும் எல்லா நிலைகளிலும், இதயபூர்வமான பக்தியுடனும் ப்ரேமையுடனும் இறைவனுடைய திருநாமத்தைத் தியானிப்பதைப் பழகுங்கள். (பிரசாந்தி வாஹினி, அத்தியாயம்-26)
இறைவனுடைய திருநாமம் மலைமலையான பாவங்களையும் தவிடுபொடியாக்க வல்ல பேரிடியாகும். - பாபா