azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 15 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 15 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Of the four Purusharthas, Dharma, Artha, Kama and Moksha, the first one, Dharma, is regarded in common usage as referring to actions like charity, the duties of one's ashrama (stage in life), going on pilgrimages and such other good deeds. But these relate only to external actions. The true Dharma of every human being is to make every endeavour to realise the Divine. The process by which this consummation can be reached constitutes Dharma. The observance of the duties relating to different ashramas (Brahmacharya, Grihastha, Vanaprastha and Sanyasa) is incidental to the particular stage in life. The duties do not constitute Dharma proper. Dharma should lead to Self-realisation. Similarly, Artha does not mean, as commonly understood, the accumulation of property and wealth. They may well become anartha (calamitous); they are not lasting. The acquisition of such wealth cannot be considered as Purushartha. The real wealth that man should acquire is the wisdom that is related to the Divine. (Divine Discourse, Jan 14, 1985)
Those who follow the path of dharma will always give first place to God. - Baba
தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகிய நான்கு புருஷார்த்தங்களில் முதலாவதான ‘தர்மம்’ என்பது பொதுவாக தான தருமங்கள், ஒருவரின் வர்ணாஸ்ரமக் கடமைகள், தீர்த்த யாத்திரைகளை மேற்கொள்ளுதல், பிற நற்செயல்கள் போன்றவற்றைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் இவை புறச்செயல்களுடன் மட்டுமே தொடர்புடையவை. ஒவ்வொரு மனிதனின் உண்மையான தர்மம் தெய்வீகத்தை உணர எல்லா முயற்சியையும் மேற்கொள்வதாகும். இந்த பரிபூரணத்துவத்தை அடைவதற்கான செயல்முறையே தர்மமாகும். பிரம்மச்சர்யம், க்ருஹஸ்தம், வானப்ரஸ்தம், சன்யாசம் ஆகிய வெவ்வேறு ஆஸ்ரமங்களுக்கான கடமைகளைக் கடைப்பிடிப்பது வாழ்க்கையின் குறிப்பிட்ட நிலைக்குத் தொடர்புடையதாகும். இந்தக் கடமைகள் முறையான ‘தர்மம்’ ஆகாது. ‘தர்மம்’ ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும். அதேபோல, ‘அர்த்தம்’ என்பது பொதுவாக புரிந்து கொள்ளப்படுவது போல் சொத்து மற்றும் செல்வத்தைக் குவிப்பதைக் குறிப்பதல்ல. அவை அனர்த்தமாக அதாவது அழிவாக மாறக்கூடியவை; அவை நிரந்தரமானவை அல்ல. அத்தகைய செல்வத்தைப் பெறுவது புருஷார்த்தம் என்று கருத முடியாது. மனிதன் பெற வேண்டிய உண்மையான செல்வம் தெய்வத்தைப் பற்றிய ஞானமே. (தெய்வீக அருளுரை, ஜனவரி 14, 1985)
தர்மத்தின் பாதையில் செல்பவர்கள் எப்போதும் இறைவனுக்கே முதலிடம் அளிப்பார்கள். - பாபா