azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 13 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 13 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Devotion should not be a part-time exercise. It should be present all the time, through joy or sorrow, pleasure or pain. "Satatam Yoginah," declares the Gita. The yogis are in constant communion with God. To be yogis (aspirants) in the morning, bhogis (lovers of food) at noon and rogis (victims of diseases) in the evening are the ways of men today. The true devotee is immersed in the Lord all the time and performs all actions as offerings to the Lord. Any action you do, as a teacher or a student or an employee, when you do it in the name of the Lord, it becomes a pious offering. This is the easiest way to sublimate the mind. When you consider your body as a gift from God, you will not do any sinful act. When you consider your wealth as a gift from God you will not misuse it. You will make the right use of it. Likewise, when you regard all your talents as endowed by God, you will use them in the service of the Divine. (Divine Discourse, May 24, 1993)
Having been born as human being and having known Divinity, sanctify your life by undertaking sacred actions. - Baba
பக்தி என்பது ஒரு பகுதிநேரப் பயிற்சியாக இருக்கக் கூடாது; சுக-துக்கம், இன்ப-துன்பம் என எல்லா நேரத்திலும் முழுநேரப் பயிற்சியாக இருக்க வேண்டும். ‘சததம் யோகினஹ’ என்கிறது கீதை. யோகிகள் இறைவனுடன் இடையறாது இணைந்து இருப்பார்கள். காலையில் யோகத்தில் ஆழ்ந்துவிடும் யோகிகளாகவும், நண்பகலில் உணவு உண்ணும் போகிகளாகவும், இரவில் ரோகத்தில் மூழ்கிவிடும் ரோகிகளாகவும் இருப்பதே இன்றைய மனிதர்களின் வழக்கமாக இருக்கிறது. உண்மையான பக்தன் எப்பொழுதும் இறைச்சிந்தனையில் ஆழ்ந்து, எல்லாச் செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்கிறான். ஒரு ஆசிரியராகவோ, மாணவராகவோ அல்லது பணியாளராகவோ நீங்கள் எந்தச் செயலையும் இறைவனை மகிழ்விப்பதற்காகச் செய்யும்போது அது புனித அர்ப்பணமாக ஆகிவிடுகிறது. இதுவே மனதை கட்டுப்படுத்துவதற்கான எளிய வழி. உங்கள் உடலை இறைவன் அருளிய வரமாகக் கருதினால், நீங்கள் அந்த உடலால் எந்தப் பாவச் செயலையும் செய்ய மாட்டீர்கள். உங்கள் செல்வத்தை இறைவன் அருளிய பரிசாகக் கருதினால், அதைத் தவறாகப் பயன்படுத்தமாட்டீர்கள்; அதை சரியாகப் பயன்படுத்துவீர்கள். அதுபோலவே, உங்கள் திறமைகள் அனைத்தையும் இறைவன் அருளியதாக நீங்கள் கருதும்போது, அவற்றை இறைவனுடைய சேவைக்காகவே பயன்படுத்துவீர்கள். (தெய்வீக அருளுரை, மே 24, 1993)
மனிதனாகப் பிறந்து, இறைவனை அறிந்து கொண்டு விட்டதால், பவித்ரமான செயல்களைச் செய்து உங்கள் வாழ்க்கையைப் புனிதமாக்கிக் கொள்ளுங்கள். - பாபா