azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 12 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 12 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
If there is anything sweeter than all things sweet, more auspicious than all things auspicious, holier than all holy objects, verily, it is the name of the Lord, or the Lord Himself. Give up the company of the worldly-minded, and the association with those infected by demonic qualities. Keep away from every type of wrongdoing. Seek always the company of the wise, the good. Take refuge in the Lord Himself; He, the pure One, is the perfect embodiment of peace, of happiness, and wisdom. He, the Lord, is seated within everyone. He stays constantly in the place where devotees sincerely and with single-mindedness honour His name. Therefore, first practice intense devotion toward the Lord. Then, you can certainly attain real and permanent happiness and wisdom. Of what use is the pursuit of the fleeting pleasures of the senses? Worship the Lord who lives in the cavity of your heart, nearer to you than your dearest friend, your father, mother, and guru! The Lord is all these and more to you! (Prasanthi Vahini, Ch 26)
Try to go closer to God as much as possible. This is the real spiritual practice one should undertake. Only then can this human birth become meaningful. - Baba
இனிமையான பொருட்கள் அனைத்தையும் விட இனிமையானது என்று ஒன்று உண்டென்றால், மங்களகரமான பொருட்கள் அனைத்தையும் விட மங்களகரமானது என்று ஒன்று உண்டென்றால், பவித்ரமான பொருட்கள் அனைத்தையும் விட பவித்ரமானது என்று ஒன்று உண்டென்றால், அது இறைவனின் நாமம் மட்டுமே! (அல்லது இறைவனே!). உலகியலான நாட்டம் கொண்டவர்கள் மற்றும் அசுரகுணம் படைத்தவர்களுடனான சகவாசத்தை விட்டுவிடுங்கள். அனைத்து தீய செயல்களிலிருந்தும் விலகியிருங்கள். சத்சங்கத்தை எப்போதும் நாடுங்கள். இறைவனிடம் சரணடைந்து விடுங்கள்; பரமபவித்ரமான அவனே, சாந்தி, சௌக்கியம், ஞானம் ஆகியவற்றின் திருவுருவமாவான். அப்படிப்பட்ட இறைவன் அனைவருள்ளும் வீற்றிருக்கிறான். எங்கு பக்தர்கள் பக்தியுடன் இறைநாமத்தை எப்போதும் ஒன்றிணைந்து பாடுகிறார்களோ, அங்கு பரமாத்மாவாகிய இறைவன் நிரந்தரமாக வாசம் செய்கிறான். முதலில், நீங்கள் அந்த பரமாத்மாவின் மீது அதீத பக்தியைக் கடைப்பிடியுங்கள். அப்போது, நீங்கள் உண்மையான, நிலையான சௌக்கியத்தையும் ஞானத்தையும் நிச்சயமாகப் பெற முடியும். கணநேரமே நீடித்திருக்கும் புலன்சார்ந்த இன்பங்களின் பின்னால் ஓடித் திரிவதால் என்ன பயன்? உங்கள் உற்ற நண்பனைவிட அருகாமையில் உள்ள, உங்களுடைய இதயக் குகையிலேயே வாசம் செய்யும், உங்களுடைய தாய், தந்தை, குருவாக விளங்கும் இறைவனை ஆராதனை செய்யுங்கள். இறைவன் இவர்கள் அனைத்துமாகவும், அதற்கும் மேலாகவும் உங்களுக்கு விளங்குகிறான்! (பிரசாந்தி வாஹினி, அத்தியாயம்-26)
எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு இறைவனோடு நெருக்கமாக இருக்க முயன்றிடுங்கள்; இதுவே ஒருவர் மேற்கொள்ள வேண்டிய உண்மையான ஆன்மிக சாதனையாகும். அப்போதுதான் இந்த மனிதப் பிறவி அர்த்தமுள்ளதாக அமையும். - பாபா