azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 08 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 08 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Inner charm is the genuine beauty. Sita who was imprisoned in Ashoka Vana in Lanka, was suddenly confronted by a monkey; but, that ugly creature struck her as full of beauty, when it brought her the long-awaited message from Rama! The loveliness of the Vana (garden), the appealing scenery, the bright beautiful ware that Ravana spread before her could not win her heart; but the one word, ‘Rama’ endeared her to the strange monkey crouched on top of the tree under which she was encircled by ogresses. The beauty of Nature is but a reflection of the beauty that is God. But, like all images, it is not substantial. Flowers fade, clouds scatter into new patterns, physical charm is but a flash that disappears in a moment - but, Divine Beauty is eternal, full, and free. That Sundaram (beauty), is Satyam (Truth), unaffected by the passage of Time, and unchanging with the location; that Sundaram is the real Shivam, the only Good that is. (Divine Discourse, Oct 25, 1972)
It is the inner beauty, not external beauty, that lends eternal satisfaction. - Baba
அகத்தின் அழகே உண்மையான அழகாகும். இலங்கையின் அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதை திடீரென ஒரு குரங்கை சந்திக்க நேர்ந்தது; ஆனால், அந்த அழகற்ற பிராணியும், அவள் ராமனிடமிருந்து நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த செய்தியைக் கொண்டு வந்ததால் மிக அழகு வாய்ந்ததாக அவளுக்குத் தோன்றியது. அந்த வனத்தின் எழில், மனங்கவர் இயற்கை காட்சி, அவள் முன் ராவணன் கொண்டு வந்து வைத்த ஜொலிக்கும் அழகான பொருட்கள் ஆகியவற்றால் அவள் இதயத்தை வெல்ல முடியவில்லை; ஆனால் அரக்கிகளால் சூழப்பட்டு தான் எந்த மரத்தின் கீழ் அமர்ந்திருந்தாளோ அதன் உச்சியில் பதுங்கியிருந்த ஒரு வினோதமான குரங்கிடமிருந்து வந்த ‘ராமா’ என்ற ஒரு சொல், அக்குரங்கை அவளுடைய பிரியத்துக்குரியதாக ஆக்கிவிட்டது. இயற்கையின் அழகு என்பது இறைவனுடைய அழகின், சுந்தரத்தின் பிரதிபலிப்பே அன்றி வேறில்லை. ஆனால், எல்லா ரூபங்களையும் போல இது நிரந்தரமானதல்ல. மலர்கள் வாடிவிடுகின்றன, மேகங்கள் சிதறி புதிய வடிவங்களாகின்றன, உடல் அழகு கணப்பொழுதில் மின்னலாய்த் தோன்றி மறைந்துவிடுகிறது, ஆனால், தெய்வீக அழகு எனும் ‘சுந்தரம்’ நித்தியமானது, முழுமையானது, சுதந்திரமானது. அந்த சுந்தரமே கால தேசங்களால் பாதிக்கப்படாத சத்தியமாகும்; அந்த சுந்தரம் ஒன்றேதான் மங்களகரமான உண்மையான ‘சிவம்’ ஆகும். (தெய்வீக அருளுரை, அக்டோபர் 25, 1972)
உள்முகமான இதயத்தின் அழகே நிலையான ஆனந்தத்தை அளிக்கவல்லது; புற அழகு அல்ல. - பாபா