azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 03 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 03 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
The see-er should not attach himself to the seen; that is the way to get free. The contact of the senses with the object arouses desire and attachment; this leads to effort and either elation or despair; then, there is the fear of loss or grief at failure and the train of reactions lengthens. With many doors and windows kept open to all the winds that blow, how can the flame of the lamp within survive? That lamp is the mind, which must burn steadily unaffected by the dual demands of the world outside. Complete surrender to the Lord is one way of closing the windows and doors, for, then, in that stance of Sharanagati (complete surrender to God), you are bereft of ego and so, you are not buffeted by joy or grief. Complete surrender makes you draw upon the grace of the Lord for meeting all the crises in your career and so, it renders you heroic, more stalwart, and better prepared for the battle. (Divine Discourse, Jan 13, 1965)
Devotion and faith are the two oars with which you can take the boat across the sea of worldly life. - Baba
காண்பவர் காணப்படுபவையுடன் பற்றுதல் கொள்ளக் கூடாது; அதுவே, மோக்ஷம் அடைவதற்கான வழியாகும். புலன்கள் ஒரு பொருளோடு தொடர்பு கொள்வதால் அது ஆசையையும், பற்றுதலையும் தூண்டுகிறது; மேலும் அது செயலில் இறங்கச் செய்து, மன மகிழ்ச்சிக்கோ அல்லது மனக் கசப்புக்கோ இட்டுச் சென்று விடுகிறது; பின்னர், நஷ்டத்தைப் பற்றிய அச்சம் அல்லது தோல்வியைப் பற்றிய துக்கம் ஏற்படுகிறது; எதிர்வினைகள் சங்கிலித்தொடராய் நீள்கின்றன. பல கதவுகளையும், ஜன்னல்களையும் காற்று வீசுவதற்கு ஏற்றவாறு திறந்து வைத்திருந்தால், உள்ளிருக்கும் தீபத்தின் சுடர் எப்படி அணையாமல் இருக்கும்? புறவுலகின் இருமைகளான சுகதுக்கம் போன்றவற்றால் பாதிக்கப்படாமல், மனம் எனும் தீபம் நிலையாக எரிந்துகொண்டு இருக்க வேண்டும். இறைவனிடம் பரிபூரண சரணாகதி அடைவது, அனைத்து கதவுகளையும் ஜன்னல்களையும் மூடுவதற்கான ஒரு வழியாகும்; ஏனெனில் அந்த சரணாகதி நிலையில் நீங்கள் அஹங்காரமின்றி இருப்பதால், சுகதுக்கங்களால் நீங்கள் பாதிக்கப்படுவதில்லை. பரிபூரண சரணாகதி, வாழ்வின் அனைத்து நெருக்கடிகளையும் எதிர்கொள்வதற்கான இறையருளை உங்களுக்குப் பெற்றுத் தந்து, உங்களை மாவீரனாக, வல்லமை மிக்கவனாக ஆக்கி, போராட்டத்திற்கு நன்கு தயார்ப்படுத்துகிறது. (தெய்வீக அருளுரை, ஜனவரி 13,1965)
பக்தி - சிரத்தை ஆகிய இரு துடுப்புக்களைக் கொண்டு நீங்கள் சம்சார சாகரத்தை படகில் கடந்துவிடலாம். - பாபா