azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 01 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 01 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Today, New Year has begun. With sacred feelings and divine thoughts, cultivate the spirit of love in you. God is not found separately in temples or in Ashrams. Truth is God. Love is God. Dharma is God. When you worship God by following these principles, He will manifest Himself then and there. There is no doubt about this. Love God wholeheartedly. Pray to God and make friends with Him. You can achieve anything if you have God as your friend. Learn today to fill your heart with love and adorn your hand with the ornament of sacrifice. Sacrifice is the jewel for the hands. Truth is the necklace one should wear. You must develop the habit of adorning these jewels in the New Year. In this New Year, develop divine love and foster peace in the country. Pray with broad feelings: Loka samastha sukhino bhavantu (May the whole world be happy)! Start the New Year with this prayer. Then, you will lead a blissful and peaceful life full of enthusiasm. (Divine Discourse, Mar 18, 1999)
A nation's prosperity is dependent on how people make use of their time in the performance of good actions. - Baba
இன்று புத்தாண்டு ஆரம்பமாகிவிட்டது. புனித உணர்வுகள் மற்றும் தெய்வீக எண்ணங்களுடன், உங்களுள் ப்ரேம உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். ஆலயங்களிலோ, ஆசிரமங்களிலோ இறைவன் பிரத்யேகமாகக் காணப்படுவதில்லை. சத்தியமே இறைவன்; ப்ரேமையே இறைவன்; தர்மமே இறைவன். இந்தக் கொள்கைகளைப் பின்பற்றி நீங்கள் இறைவனை ஆராதித்தால், அவர் அங்கேயே அக்கணமே தோன்றுவார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இறைவனை மனதார நேசியுங்கள். இறைவனிடம் பிரார்த்தித்து அவனுடன் நட்பு பாராட்டுங்கள். இறைவனை உங்களுடைய நண்பனாகப் பெற்றுவிட்டால், நீங்கள் எதையும் சாதிக்கலாம். இன்றே உங்களுடைய இதயத்தை ப்ரேமையால் நிறைப்பதற்குக் கற்றுக்கொண்டு, தியாகம் எனும் ஆபரணத்தால் உங்களுடைய கரங்களை அலங்கரியுங்கள். தியாகமே கரங்களுக்கான ஆபரணம். சத்தியமே கழுத்திற்கான ஆபரணம். புத்தாண்டில் இந்த ஆபரணங்களை அணிந்து கொள்ளும் பழக்கத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் புத்தாண்டில் தெய்வீக ப்ரேமையை வளர்த்துக் கொண்டு, நாட்டில் அமைதியைப் பேணுங்கள். விசாலமான பாவத்துடன், “லோகா சமஸ்தா சுகினோ பவந்து” - உலகமனைத்தும் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்! இந்தப் பிரார்த்தனையுடன் புத்தாண்டைத் தொடங்குங்கள். பின்னர், நீங்கள் உற்சாகம் நிறைந்த ஆனந்தமான, அமைதியான வாழ்க்கையை நடத்துவீர்கள். (தெய்வீக அருளுரை, மார்ச் 18,1999)
மக்கள் நற்செயல்கள் ஆற்றுவதில் தங்கள் நேரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே ஒரு தேசத்தின் செழுமை அமைகிறது. - பாபா