azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 27 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 27 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

The mind, as Arjuna complained, hops from belief to doubt, from one conclusion to its negation and it causes turmoil and confusion. But, there is one method by which it can be conquered. The black bee can bore a hole in the hardest wood. But, when dusk intervenes while it is sipping the nectar from the lotus flower and, as a result, when the open petals close in on the bee, it finds itself imprisoned, with no hope of escape. It does not know how to deal with softness! So too, the mind can play its tricks and jump wantonly in any arena; but when placed on the lotus feet of the Lord, it becomes inactive and harmless. In order to offer the mind entirely to the Lord, deep detachment from worldly desires is needed. Superficial devotion or shallow steadfastness cannot succeed. To fell the hard sandalwood tree, a heavy axe of steel is needed. (Divine Discourse, Dec 24, 1980)
Detach the mind from the temporary and attach it to the eternal. - Baba
அர்ஜுனன் முறையிட்டது போல், மனமானது நம்பிக்கை - சந்தேகம், முடிவு - மறுப்பு என தாவிக் கொண்டே இருப்பதால் அது கலக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. ஆனால், அதை வெல்வதற்கு ஒரு வழி உள்ளது. கருவண்டு மிகவும் கடினமான மரத்தைக் கூட துளைக்க வல்லது. ஆனால், தாமரை மலரில் தேனைப் பருகிக்கொண்டிருக்கும் போது அந்தி நேரம் நெருங்கியவுடன் திறந்த இதழ்கள் மூடிக்கொள்கின்றன; அதன் விளைவாக வண்டு தப்பிக்க வழியின்றி சிறைப்பட்டு விடுகிறது. மென்மையை எப்படிக் கையாள்வது என்று அதற்குத் தெரியாது! அதுபோல், மனம் சேட்டைகளைச் செய்துகொண்டே தன்போக்கில் எங்கு வேண்டுமானாலும் தாவிக்குதித்துக் கொண்டிருக்க முடியும்; ஆனால் அதை இறைவனின் தாமரைப்பாதங்களில் சேர்த்துவிடும்போது அடங்கி ஒடுங்கி விடுகிறது. மனதை முழுவதுமாக இறைவனிடம் அர்ப்பணிக்க, உலக ஆசைகளின் மீது ஆழ்ந்த பற்றின்மை வேண்டும். மேலோட்டமான பக்தி அல்லது ஆழமற்ற உறுதிப்பாடு வெற்றி பெற முடியாது. உறுதியான சந்தன மரத்தை வெட்டி வீழ்த்த கனமான இரும்பு கோடரி தேவைப்படுகிறது அல்லவா? (தெய்வீக அருளுரை, டிசம்பர் 24, 1980)
மனதை அநித்தியத்திலிருந்து விலக்கி நித்தியத்துடன் இணைத்திடுங்கள். - பாபா