azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 26 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 26 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Christmas means the Mass that is held on the birthday of Christ. It is fundamentally a sacred religious rite. To deal with it as if it is a festival for drinking and dancing or even for recalling Jesus to memory is very wrong. The day must be spent in prayer; not merely this day, but cultivate the spiritual discipline (sadhana) of prayer as a normal way of life. Prayers for worldly ends do not reach God. They will reach only those deities who deal with such restricted spheres. But, all prayers arising from pure love, unselfish eagerness to render service, and from hearts that are all-inclusive will reach God. For, God is the very Embodiment of love. We know that we have to see the Moon only through the moonlight. So too, God who is love can be seen and realised only through love. Love is God, live in Love. That is the Message I give you. (Divine Discourse, Dec 24, 1980)
What the world needs today is the redeeming and unifying force of love - love which continually expands and embraces more and more people. - BABA
கிறிஸ்துமஸ் என்றால் கிறிஸ்து பிறந்த நாளில் நடத்தப்படும் மாஸ் - அதாவது கூட்டுப் பிரார்த்தனை என்று பொருள். அது அடிப்படையில் ஒரு புனிதமான மதச் சடங்காகும். இந்த தினத்தை குடிப்பதற்கும், கூத்தாடுவதற்கும், அல்லது அன்று மட்டும் இயேசுவை நினைவுகூர்வதற்குமான பண்டிகையாகக் கருதுவது மிகவும் தவறானது. இந்த நாளை பிரார்த்தனையில் கழிக்க வேண்டும்; இந்த நாளில் மட்டுமல்ல, பிரார்த்தனை எனும் ஆன்மிக சாதனையை ஒரு இயல்பான வாழ்க்கை நடைமுறையாக வளர்த்துக் கொள்ளுங்கள். உலகியல் நோக்கங்களுக்கான பிரார்த்தனைகள் இறைவனைச் சென்றடைவதில்லை. அவை அந்த குறிப்பிட்ட நோக்கங்களை மட்டுமே கையாளும் தேவதைகளை சென்றடையும். ஆனால், பரிசுத்தமான ப்ரேமை, சேவை ஆற்றுவதற்கான தன்னலமற்ற ஆர்வம், அனைத்தையும் அரவணைக்கும் இதயங்கள் ஆகியவற்றிலிருந்து எழும் அனைத்து பிரார்த்தனைகளும் நேராக இறைவனைச் சென்றடையும். ஏனெனில், இறைவன் ப்ரேமையின் திருவுருவம். சந்திரனின் ஒளியில்தான் நாம் சந்திரனைக் காண முடியும் என்பதை நாம் அறிவோம். அதுபோலவே ப்ரேமையே வடிவாகிய இறைவனை ப்ரேமையின் மூலமாகத்தான் காணவும் உணரவும் முடியும். அன்பே கடவுள்; அன்பிலேயே வாழுங்கள். அதுதான் நான் உங்களுக்கு வழங்கும் அருட்செய்தி. (தெய்வீக அருளுரை டிசம்பர் 24, 1980)
இன்று உலகிற்குத் தேவைப்படுவது மக்களை மீட்டு ஒருங்கிணைக்கும் ஆற்றல் பெற்ற ப்ரேமையே; இந்த ப்ரேமைதான் தொடர்ந்து விசாலமடைந்து மேன்மேலும் மக்களை அரவணைத்துச் செல்லத்தக்கது. - பாபா