azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 20 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 20 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
The mind is influenced by passion for objective pleasure and delusion of ignorance with which it pursues the fleeting objects of the world with amazing quickness. So, again and again, it must be led towards higher ideals. Of course, this is difficult at first, but with persistent training, the mind can be tamed; then it will get fixed in the perpetual enjoyment of the ‘Om’. The mind can be trained by following methods of quiet persuasion, promise of attractive inducements, practice of withdrawing senses from the outer world, endurance of pain and travail, cultivation of sincerity and constancy, and acquisition of mental equipoise (sama, dama, uparati, titiksha, shraddha, and sama-dana). The mind can be turned toward Brahman and constant contemplation of Brahman by study of Upanishads, adoption of regular prayer, sharing with others ecstasy of devotional singing, and adherence to truth. (Jnana Vahini, Ch 6)
Train the mind to turn towards the intellect for inspiration and guidance, not towards the senses for adventures and achievements. - Baba
உலக சுகங்கள் மீதான தீவிர ஆசை மற்றும் அறியாமையின் மாயை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு தாற்காலிகமான உலகப் பொருட்களின் பின்னால் மனம் தறிகெட்டு ஓடுகிறது. எனவே, அதைத் திரும்பத் திரும்ப உயர் லட்சியங்களை நோக்கித் திருப்ப வேண்டும். ஆரம்பத்தில் சற்று கடினமாக இருந்தாலும், பயிற்சியின் மூலம் மனதை அடக்கி, ‘ஓம்’ எனும் ப்ரணவத்தை நிரந்தரமாக அனுபவிப்பதில் அதை நிலைகொள்ளச் செய்ய வேண்டும். சமா, தமா, உபரதி, திதிக்ஷா, ஸ்ரத்தா, ஸமாதான - அதாவது மனதை அடக்குதல், புலனை அடக்குதல், புறப்பொருள்களை விலக்கி மனதை உள்முகமாகத் திருப்புதல், துன்பங்களைப் பொறுத்தல், ஆழ்ந்த நம்பிக்கையும் சிரத்தையும் கொண்டிருத்தல், மனதை சமநிலையில் வைத்திருத்தல் ஆகிய வழிமுறைகளின் மூலம் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். உபநிஷதங்களைப் படிப்பது, பிரார்த்தனை, பஜனை செய்வது, சத்வ குணத்தை பின்பற்றுவது ஆகியவற்றால் மனதை நிரப்பி, பரப்ரம்மத்தின் மீதான தியானத்தில் ஈடுபடுத்த வேண்டும். (ஞான வாஹினி, அத்தியாயம்-6)
உத்வேகமும் வழிகாட்டுதலும் பெற புத்தியின் பக்கம் திரும்புவதற்கு மனதைப் பயிற்றுவியுங்கள்; சாகசங்களுக்காகவும் சாதனைகளுக்காகவும், புலன்களை நோக்கி அல்ல. - பாபா