azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 16 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 16 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Just as a work being done or an activity that one is engaging in can be referred to as karma, no work being done and no activity being engaged in are also karma! On seeing people silent and calm, sitting quiet and doing nothing, we infer that they are free from activity. How, then, can they be described as doing activity? What is meant by saying, “They are not doing any work; they are not engaged in any activity”? That statement only means that “They are engaged in keeping themselves away from any work or activity.” So, it can be affirmed that people sometimes are busy doing work and sometimes busy keeping work away from their attention; that is to say, they are engaged in activity (karma) as well as inactivity (akarma). If they are not engrossed or attached with the action they do and are engaged in it as their duty, as their way of worship, and if they are not attached to the fruit of their action, then they can practise inactivity even in action. This is the highest spiritual discipline. (Sathya Sai Vahini, Ch 18)
It is only by developing the purity of mind that we can ensure the purity of action. - Baba
ஒருவர் ஒரு பணியைச் செய்வது ‘கர்மா’ என்று எவ்வாறு சொல்லப்படுகிறதோ, அதேபோல எந்தப் பணியும் செய்யாமல் சும்மா இருப்பதையும் ‘கர்மா’ என்றே சொல்லலாம். பொதுவாக, அமைதியாக அமர்ந்துகொண்டு எதுவும் செய்யாமல் இருப்பவர்களை அவர்கள் எந்த வேலையையும் செய்வதில்லை என்று நாம் எண்ணுகிறோம். அப்படியென்றால், அவர்கள் பணியாற்றுகிறார்கள் என்று எவ்வாறு கூற முடியும்? "அவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை; அவர்கள் எந்தப் பணியிலும் ஈடுபடவில்லை" என்று கூறுவதன் பொருள் என்ன? இதன் பொருள், “அவர்கள் எந்த வேலையிலோ பணியிலோ ஈடுபடாமல் விலகி இருக்கிறார்கள்" என்பதுதான். எனவே, மனிதர்கள் சில சமயம் வேலை செய்வதில் மும்முரமாக இருக்கிறார்கள், சில சமயம் வேலை செய்யாமல் சும்மா இருக்கும் பணியை செய்கிறார்கள்; அதாவது, அவர்கள் ‘கர்மா’வில் ஈடுபடுகிறார்கள், ‘அகர்மா’விலும் ஈடுபடுகிறார்கள் என்றே கூற வேண்டும். ஆற்றும் கர்மாவில் பற்றின்றி, எந்தப் பலனையும் எதிர்பாராது, ஒரு வழிபாட்டைப் போல, தங்கள் கடமையாக எண்ணி செய்யும்போது, கர்மாவிலும் அகர்மாவைச் செய்தவர்களாக ஆகிறார்கள். இதுவே மிக உயர்ந்த ஆன்மிக சாதனை ஆகும். (சத்ய சாயி வாஹினி, அத்தியாயம்-18)
மனத்தூய்மையை வளர்த்துக்கொண்டால் மட்டுமே செயலில் தூய்மையை நாம் உறுதி செய்ய முடியும். - பாபா