azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 15 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 15 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
To a superficial observer, life appears to be a rotation of eating, drinking, toiling, and sleeping. But verily life has a much greater meaning, a much deeper significance. Life is a sacrifice (yajna). Each little act is an offering to the Lord. If the day is spent in deeds performed in this spirit of surrender, what else can sleep be except total immersion in God (Samadhi)? People commit the great fault of identifying themselves with the body. People accumulate a variety of things for the upkeep and comfort of the body. Even when the body becomes weak and decrepit with age, people attempt to bolster it through one means or another. But how long can death be postponed? When Yama’s warrant comes, each has to depart. Position, pride, and power - all vanish before death. Realising this, strive day and night, with the purity of body, mind and spirit, to realise the Higher Self by the service of all living beings. (Prema Vahini, Ch 6)
The body is an instrument gifted to you for service. Remember, you are not this body, the body cannot be you! - Baba
மேலோட்டமாக பார்க்கும் ஒருவருக்கு மனித வாழ்க்கை என்பது உண்பது, குடிப்பது, உழைப்பது, உறங்குவது ஆகியவற்றின் ஒரு சுழற்சி போலத் தோன்றுகிறது. ஆனால், உண்மையில் அதற்கு உயர்ந்த அர்த்தமும், ஆழ்ந்த முக்கியத்துவமும் இருக்கிறது. வாழ்க்கை அனைத்தும் ஒரு மஹா யக்ஞமாகும். ஒவ்வொரு சிறிய செயலும் இறைவனுக்கு செய்யப்படும் அர்ப்பணிப்பாகும். இந்த ஈஸ்வரார்ப்பண உணர்வோடு ஆற்றும் செயல்களுடன் ஒரு நாளைக் கழிக்கும்போது, உறக்க நிலை என்பது சமாதி நிலையே அன்றி வேறு எதுவாக இருக்கமுடியும்? மனிதர்கள் தங்களை தேகமே எனத் தவறாகக் கருதுவதால், அதன் பராமரிப்பிற்கும் சௌகரியத்திற்கும் பல பொருட்களை சேகரித்துக் கொள்கிறார்கள். உடல் நலிந்து மூப்படைந்துவிட்டபோதும் கூட, ஏதோ ஒரு வழியில் அதற்கு வலுவூட்ட மனிதர்கள் முயலுகிறார்கள். ஆனால் எவ்வளவு காலத்திற்கு மரணத்தைத் தள்ளிப்போட முடியும்? மரணத்தின் அழைப்பு வந்துவிட்டால், அதன்பின் ஒரு கணமேனும் இருக்க முடியுமா? மரணத்தின் முன் பதவி, பெருமை, அதிகாரம் போன்றவை அனைத்தும் மாயமாய் மறைந்துவிடும். இதை உணர்ந்து, திரிகரண சுத்தியுடன் அனைத்து உயிரினங்களுக்கும் அல்லும் பகலும் சேவை செய்வதன் மூலம் பரமாத்மாவை அடையப் பாடுபடுங்கள். (ப்ரேம வாஹினி, அத்தியாயம்-6)
உடல் என்பது சேவை செய்வதற்காக உங்களுக்கு அருளப்பட்ட ஓர் கருவியே. நீங்கள் இந்த உடல் அல்ல, இந்த உடல் நீங்களாக இருக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். - பாபா