azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 09 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 09 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Making God into stone is the effort being made today! How can such effort lead to truth when the real task is to see the stone as God? First, the form of the Godhead has to be meditated upon and imprinted on the consciousness; then, that form has to be conceived within the stone and the stone forgotten in the process until the stone is transformed into God. In the same way, you have to imprint on your consciousness the basic dharma, the fundamental fact of Atma as the only entity; then, filled with that faith and vision, you have to deal with the manifold world of objects, its attractions and impingements. The ideal can be realised only thus. If this is done, there is no danger of the authentic meaning getting diluted or of Atma-dharma losing its lustre. What happens when a stone is worshipped as God? The unlimited, the ever-present, the all-pervading immanent entity, the Absolute, is visualised in the particular, in the concrete. Similarly, dharma that is universal, equal, and free can be spotted and tested in a single concrete act. (Dharma Vahini, Ch 2)
It is the compassion that is generated in a pure heart that constitutes the base of true dharma. - Baba
இன்று கடவுளைக் கல்லாக ஆக்குவதற்குத்தான் முயற்சிக்கப்படுகிறது. கல்லில் கடவுளைக் காண்பதே சரியானதாக இருக்கும்போது, இது எப்படி சத்தியத்திற்கு இட்டுச் செல்ல முடியும்? முதலில் இறைவனின் ரூபத்தைத் தியானித்து, உள்ளுணர்வில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்; பின்னர், அந்த ரூபத்தைக் கல்லில் காணும்போது அந்தக் கல் மறைந்து, அதில் கடவுளை தரிசிக்க முடிகிறது அல்லவா? அதேபோல, இருப்பது ஆத்மா ஒன்றுதான் என்ற யதார்த்த ஆத்மதர்மத்தை இலட்சியமாக சித்தத்தில் பதிய வைத்துக்கொண்டு, உலகியலான ஆசார தர்ம கருமங்களை ஆற்றும்போது, ஆத்மதர்மத்தின் உட்பொருளும் மாறாது, அது மறைந்தும் போகாது அல்லவா? கல்லைக் கடவுளாக வழிபடும்போது என்ன ஆகிறது? எங்கும் வியாபித்திருக்கும் அனைத்து உயிரினங்களிலும் உறையும் அருவமான சர்வேஸ்வரனை ஓர் குறிப்பிட்ட ரூபத்தில் நாம் உருவகப்படுத்தி தரிசிக்க முடிகிறது. அதேபோல, எங்கும் வ்யாபித்து, அனைவருக்கும் சமமான, சுதந்திரத்தின் ஸ்வரூபமாகிய தர்மத்தை, நாம் செய்யும் உலகியலான காரியங்களில் சோதித்து அடையாளம் காணவும், கடைப்பிடிக்கவும் முடியும். (தர்ம வாஹினி, அத்தியாயம்-02)
பரிசுத்தமான இதயத்தில் சுரக்கும் கருணையே உண்மையான தர்மத்தின் அடித்தளமாக அமைகிறது. - பாபா