azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 05 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 05 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Being, consciousness, bliss, fullness, eternity (sat, chit, ananda, paripurna, nitya) — Brahman is described by these five attributes. Through an understanding of these, Brahman can be grasped. Being is unaffected by time. Consciousness illumines and reveals itself as well as all else. Bliss creates the utmost desirability. Fullness knows no defect or diminution or decline or defeat. Eternity is that which is unaffected by the limitations of space, time and objectification. In light of this knowledge of Brahman (Brahma-jnana), the world is a mirage - temporary, unreal, and negated by knowledge. But remember that “you”, the individual (jiva), the seer, are “being, consciousness, bliss, Brahman”. Get fixed in that assurance; meditate on the Om, which is its best symbol. Become aware from this moment that you are the Atma. When the fog of ignorance vanishes, the Atma in each will shine in its native splendour. Then you know that you were pursuing a mirage in the desert sands, that you were taking as “real” objects that had a beginning and therefore had an end. (Upanishad Vahini, Ch 12)
The mind is the cause of man's joys and sorrows. It is also the means of man's Mukti (liberation). - Baba
சத், சித், ஆனந்தம், பரிபூரணம், நித்யம் ஆகிய இந்த ஐந்து குணங்களைக் கொண்டது பரப்பிரம்மம் என வர்ணிக்கப்படுகிறது. இந்த குணங்களைப் புரிந்து கொள்வதன் மூலம் பரமாத்மாவை அறிய முடியும். காலத்தால் பாதிக்கப்படாமல் முக்காலத்திலும் இருப்பதே ‘சத்’ ஆகும். தன்னைத் தான் அறிந்து பிரகாசிக்கச் செய்துகொண்டு, மற்றவர்களையும் பிரகாசிக்கச் செய்வதே 'சித்' ஆகும். அனைவருக்கும் மிகவும் விரும்பத்தக்கதாக இருப்பது ‘ஆனந்தம்’. குறையோ, குறைவோ, தளர்வோ, தோல்வியோ அற்றதே ‘பரிபூரணம்’. ‘நித்யம்’ என்பது கால, தேச, பொருட்களின் பரிமாணங்களால் பாதிக்கப்படாத ஒன்றாகும். ப்ரம்ம ஞானத்தின்படி இந்த உலகம் தாற்காலிகமான, மெய்யற்ற, இல்லையென ஞானத்தால் மறுக்கப்படும் கானல்நீர் போன்றது, அதாவது மித்யை ஆகும். ஆனால் ஜீவாத்மாவான, அனைத்தையும் காணும் நீங்களே, "சத், சித், ஆனந்தம், ப்ரம்மன்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த நம்பிக்கையில் நிலைகொண்டு, அதன் சிறந்த சின்னமான ஓம்காரத்தைத் தியானம் செய்யுங்கள். இந்தத் தருணத்திலிருந்து நீங்கள் ஆத்மாவே என்பதை உணருங்கள். அஞ்ஞானத்தின் பனி விலகும்போது, ஒவ்வொருவருள்ளும் ஆத்மா தனது ஸ்வரூபத்தில் பிரகாசிக்கும். பின்னர் நீங்கள், பாலைவனத்தில் தென்படும் கானல்நீரைப் பின் தொடர்ந்ததைப் போல, முதலும் முடிவும் உள்ள பொருட்களை "உண்மையானவை" என்று நம்பிக் கொண்டிருந்தீர்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். (உபநிஷத் வாஹினி, அத்தியாயம்-12)
மனமே மனிதனின் சுக துக்கங்களுக்குக் காரணம். அதுவே மனிதனின் முக்திக்கான கருவியும் ஆகும். - பாபா