azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 01 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 01 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Your nature is revealed by your acts, gestures, looks, speech, your food habits, dress, and gait! Therefore, pay attention to ensure that your speech, your movements, thoughts, and behaviour are all right — full of love, pure, and devoid of wildness and waywardness! You must develop the humility to believe that you have much good to learn from others! Your enthusiasm, your strong ambition, resolution, capacity to work, your store of knowledge, and wisdom — these must be related to all others and not utilised for you alone! Your heart should take all others in. Your thoughts too should be patterned on those broad lines. Treat each trouble you encounter as a fortunate opportunity to develop your strength of mind and to toughen you with greater fortitude. Eating food is a holy ritual (yajna). It should not be performed during moments of anxiety or emotional tension. Food must be considered as medicine for the illness of hunger and as the sustenance of life. (Vidya Vahini, Ch 08)
A good character is the greatest wealth you can acquire. - Baba
உங்கள் செயல்கள், சைகைகள், பார்வைகள், பேச்சு, உணவுப் பழக்கம், நடை, உடை ஆகியவற்றால் உங்கள் இயல்பு அறியப்படுகிறது. எனவே உங்களுடைய பேச்சுக்கள், அசைவுகள், எண்ணங்கள், நடத்தை ஆகியவை அனைத்தும் ப்ரேமை நிறைந்ததாக, சாத்வீகமாக, விகாரமில்லாமல் சீராக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்! பிறரிடமிருந்து நீங்கள் நல்லதைக் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்ற பணிவான பாவத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய உற்சாகம், வலுவான லட்சியம், சங்கல்பம், செயல்திறன், அறிவாற்றல், ஞானம் ஆகிய இவை அனைத்தும் அனைவருக்குமானதாக இருக்க வேண்டுமே அன்றி, உங்களுக்கு மட்டுமே பயன்படுவதாக இருக்கக்கூடாது! உங்கள் இதயம் மற்ற அனைவரையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்களது சிந்தனைகளும் இதேவிதமாக விசாலமானதாக இருக்க வேண்டும். நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு கஷ்டத்தையும், உங்களது மனவலிமையை வளர்த்துக்கொண்டு, உங்களை மேலும் அதிக மனஉறுதி படைத்தவர்களாக ஆக்கிக் கொள்வதற்குக் கிடைத்த அதிருஷ்ட வாய்ப்பாகக் கருதுங்கள். உணவு உண்பது என்பது யக்ஞம் செய்வது போன்றதாகும். அதை, கவலையுடன் இருக்கும்போதோ அல்லது உணர்ச்சிவசப்பட்டு இருக்கும்போதோ செய்யக் கூடாது. உணவை, பசிப்பிணிக்கு மருந்தாக, வாழ்வாதாரமாகக் கருத வேண்டும். (வித்யா வாஹினி, அத்தியாயம்-8)
நற்குணநலனே நீங்கள் பெற வேண்டிய மிக உயர்ந்த செல்வமாகும். - பாபா